பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 83 வைத்துக் கொள்ளலாமென்று நினைக்கிறேன். மகாராஜாவின் கட்டளை எப்படியோ அப்படியே நடந்து கொள்ளுகிறோம்" என்றாள். உடனே இளவரசர் மருங்காபுரி ஜெமீந்தாரை நோக்கி, "என்ன ஐயா! உம்முடைய பிரியம் எப்படி?” என்றார். அதைக்கேட்ட ஜெமீந்தார்.அசட்டு நகை நகைத்து, 'எனக்குச் சங்கீதத்தில் எவ்வளவு பிரியமென்பது தங்களுக்கே தெரிந்த விஷயம். அப்படியிருக்க நான் என்ன சொல்லப் போகிறேன்? ஒன்றுமில்லை. எல்லாம் அன்னத்தின் ஏற்பாட்டுப்படியே நடக்கட்டும்' என்றார். உடனே அன்னம் பணிவாக இளவரசரைநோக்கி, "பாட்டுக் கச்சேரி ஆரம்பமாகுமுன் ஏதாவது கொஞ்சம் தாகத்துக்குச் சாப்பிட்டால், அதன் பிற்பாடு எவ்வளவுநேரம் வேண்டுமானாலும் தமாஷாக உட்கார்ந்திருக்கலாம்' என்று கூறி நயமாக வேண்ட, அதைக்கேட்ட இளவரசர், 'இப்போது தான் நாங்களிருவரும் சாப்பிட்டு விட்டு வருகிறோம். பதினோரு மணிக்குமேல் வேண்டுமானால், கொஞ்சம் அதையும் பார்த்துக் கொள்ளுவோம்; பாட்டுக் கச்சேரியை ஆரம்பிக்கலாம்' என்றார். அதைக்கேட்ட அன்னம், “சித்தம்; அப்படியே ஆகட்டும்" என்று கூற, அதற்குள் அவளது புதல்வியர் ஐவரும் பாட்டுக் கச்சேரிக்குத் தேவையான வாத்தியங்களை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தனர். மூத்த பெண்ணான அம்மாளு தம்புராவை எடுத்துச்சுருதி கூட்டினாள். இரண்டாவது மகளான தனம் என்பவள் வீணையை எடுத்துக்கொண்டாள். மூன்றாவது புத்திரியான சிவபாக்கியம் என்பவள் புல் லாங் குழலை வைத்துக்கொண்டாள். நான்காவது புதல்வியான அபிராமி என்பவள் மத்தளத்தைச் சரிப்படுத்தத் தொடங்கினாள். ஐந்தாவது குமாரியான செல்லம் என்பவள் பிடிலை வைத்துக்கொண்டு