பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 பூர்ணசந்திரோதயம்- 1. கொண்டவர்களாய் ஓடிவந்து இளவரசரைச் சூழ்ந்து கொண்டனர். அதுவரையில், ஜெமீந்தார் இருந்ததைக் கருதி நாணிக்கோணி விலகி யிருந்ததற்கு முற்றிலும் மாறாக, அந்த ஐவரும் கலைமானைச் சூழ்ந்து நிற்கும் பேடுகள் போல வந்து நெருங்க, உடனே இளவரசர் அவர்களை நோக்கி, “சரி; நான் புறப்பட்டுப்போக இன்னம் இரண்டு மணிநேர மிருக்கிறது. அதற்குள் நாம் என்ன விளையாட்டு விளையாடலாம்? அம்மாளு! நீ தான் மூத்தவள். நீ சொல்' என்றார். அம்மாளு அவரைப் பார்த்துக் குழந்தை போலக் கொஞ்சிக் கொஞ்சிப் பேசத் தொடங்கி, "தங்களுடைய கண்களைக் கட்டி விடுகிறோம். தாங்கள் எங்களைப் பிடிக்க வேண்டும்' என்றாள். அதைக் கேட்ட மற்ற மடந்தையரும் களிகொண்டு, 'ஆம். அதுதான் நல்ல விளையாட்டு. நம்முடைய மகாராஜா குருடனைப் போலத் தடவவேண்டும். நாங்கள் தலையில் குட்ட வேண்டும்’ என்று வேடிக்கையாகக் கூறினர். அதைக் கேட்ட இளவரசர்தேன்குடித்த நரி போல மகிழ்ந்து பல்லிளித்து, 'சரி; அதுதான் நல்ல விளையாட்டு. ஆனால் நீங்கள் இந்த மண்டபத்தை விட்டு வெளியில் மாத்திரம் போகக் கூடாது. முதலில் இதன் நான்கு பக்கத்துக் கதவுகளையும் மூடித் தாளிட்டு விடுங்கள். இதற்குள்ளாகவே ஒடிப் பிடிக்க வேண்டும்' என்றார். உடனே கதவுகள் யாவும் மூடி உட்புறத்தில் தாளிடப் பட்டன. ஒரு சிறிய பட்டுத்துணியைக் கொண்டு இரண்டு பெண்கள் இளவரசரது கண்களைக் கட்டிப் பின்புறத்தில் இறுக முடிந்துவிட்டு அவரது தலையில் மெதுவாக ஒரு குட்டுப் போட்டுவிட்டு அப்பால் விலகிக்கொண்டு, "எங்கே, பிடியுங்கள் பார்க்கலாம்' என்று நகைத்துக்கொண்டே கூற, இளவரசர் எழுந்து தமது கைகளை நீட்டிய வண்ணம் குருடனைப் போல அங்குமிங்கும் பாயத் தொடங்கினார்.