பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 97 அதைக்கேட்ட கட்டாரித்தேவன், "மகாராஜா இப்படிப்பட்ட தடிப்பான வார்த்தைகளை உபயோகிப்பதில் பிரயோசனமே இல்லை. நாங்கள் பைத்தியக்காரர்களல்ல. காரணமில்லாமல் எவரும் ஒரு காரியத்தைச் செய்யமாட்டார்கள். பாட்டையிலி ருந்து இப்போதுதானே வீட்டுக்குள் வந்திருக்கிறோம். இதற்குள் இப்படி அவசரப்பட்டால், என்ன செய்கிறது? இங்கே வந்த காரணத்தை அறிந்துகொள்ள மற்றவரைவிட மகாராஜாவே அதிகமாக அவசரப்படுகிற படியால், மகாராஜா மாத்திரம் என்னோடு கூட இன்னோர் அறைக்கு வரட்டும். அவர் திரும்பி வருகிறவரையில் நீங்கள் மூன்றுபேரும் இங்கேயே இருங்கள் என்று நிதானமாகவும் அழுத்தமாகவும் கூறினான். அந்த வார்த்தையைக் கேட்ட இளவரசர் மற்ற மூவரையும் விட்டுப் பிரிந்துபோக மனமற்றவராய், கட்டாரித்தேவனை நோக்கி, “நீ உன்னோடு கூடத் தனியாக வரும்படி என்னைக் கூப்பிடுகிறாயே. நீ எனக்கு எவ்விதத்துன்பமும் செய்யமாட்டா யென்பதை நான் எப்படி உறுதியாக நம்புகிறது?" என்றார். உடனே கட்டாரித்தேவன் அவரைப் பார்த்து, 'இதே இடத்தில் நாங்கள் உங்களுடைய மண்டையைப் பிளந்துவிட எங்களுக்கு வல்லமை இருக்கிறது. அப்படிச் செய்யாமல் நாங்கள் உங்களை உயிரோடு வைத்திருப்பதே பெரிய உறுதியல்லவா?" என்றான். அதைக்கேட்ட இளவரசர் ஒருவாறு துணிவடைந்து, "சரி; அப்படியானால் உன்னோடு கூட வர எனக்குச் சம்மதந்தான்' என்று மறுமொழி கூறினார். உடனே கட்டாரி, 'உங்களுக்குச் சம் மதமிருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் உங்களை அழைத்துக்கொண்டு தான் போகப் போகிறேன். ஐயா ஜெமீந்தாரே! நீரும் இரண்டு ஆட்களும் தயவுசெய்து கொஞ்சநேரம் இவ்விடத்திலேயே இருங்கள். நான் சீக்கிரத்தில் திரும்பி வருகிறேன்"என்று கூறி, பூ.ச.!-8