பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 123 எடுத்துக்கொள். ஆனால், அந்தப் புஸ்தகத்துக்குள் ரகசியமான காகிதங்கள் ஏதேனும் இருக்கலாம். அந்தக் காகிதங்களினால், உனக்கு எவ்விதப் பிரயோசனம் இல்லை. ஆகையால், அந்த இரண்டு நோட்டுகளை மாத்திரம் நீ எடுத்துக் கொண்டு புஸ்தகத்தை என்னிடத்தில் கொடுத்துவிடு' என்றார். கட்டாரி: உம்முடைய ரகசியமான காகிதங்கள் இருந்தால் அவைகளினால் எனக்கு ஏன் பிரயோசனமில்லை? நீர்அப்படிச் சொல்லக்கூடாது. நீர் சொல்லுகிறபடி நான் இதோ உமக்கெதிரிலேயே அந்த இரண்டு நோட்டுகளையும் எடுத்துக் கொண்டேன். மற்ற எந்தக் காகிதத்தையாவது டைரியையாவது நான் படிக்காமல் இப்படியே திருப்பிக்கொடுத்துவிடுவதற்கு நீர் எனக்கு எவ்வளவு ரூபாய் சன்மானம் செய்வீர். ஜெமீந்தார்: (அவன் சொன்ன ஏற்பாட்டை ஒப்புக்கொள்ள ஆவலுள்ளவராய்ப் பேசத் தொடங்கி) சரி; அப்படியானால் அந்தப் புஸ்தகத்தை இப்போதே என்னிடத்தில் கொடுத்துவிடு. நாளைய தினம், நீ யாரையாகிலும் என்னிடத்தில் அனுப்பி வைத்தால், இன்னொரு ஆயிரம் ரூபாய் கொடுத்தனுப்புகிறேன். கட்டாரி: (மிகுந்த மகிழ்ச்சி யடைந்தவனாய்) சரி: உம்முடைய மதிப்புக்கே இது ஆயிரம் ரூபாய் பெறத்தக்கது என்பது தெரிகிறது. அப்படியானால், அந்தத் தொகையை விடப் பலமடங்கு அதிகமான தொகை பெறும் படியான ரகசியங்கள் இந்தப் புஸ்தகத்தில் அடங்கி இருக்கிறது என்பது நிச்சயமாகிறது. உம்மிடத்தில் இருந்ததையெல்லாம் சந் தோஷமாகவும் பெருந்தன்மையோடும் நீர் எடுத்து என்னிடத் தில் கொடுத்ததைக் கருதி நான் உம்மிடத்தில் அதிகமான கடுமை காட்டவும், அநாவசியமான பெருத்த தொகையைப் பெறவும் ஆசைப்படவில்லை. லாபம் எந்தப் பக்கத்துக்காவது இருக்கட்டும். ஆயிரம் என்பதை இரண்டாயிரமாக வைத் துக்கொள்வோம். அதோடு நான் திருப்தியடைந்து விடுகிறேன்.