பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 பூர்ணசந்திரோதயம்-1 ஜெமீந்தார்:- (திகைப்பும் தடுமாற்றமும் அடைந்து) என்னப்பா பன்னிரண்டு அணா பெறத்தக்க ஒரு டைரிப் புஸ்த கத்துக்கு வாய் கூசாமல் இரண்டாயிரம் ரூபாய் கேட்கிறாயே! சரி, போனால் போகிறது. நீ கேட்கிறதுபோல இரண்டாயிரம் ரூபாய் நாளைய தினம் கொடுக்கிறேன்; புஸ்தகத்தை என் னிடத்தில் இப்போதே கொடுத்துவிடு. கட்டாரி: (புரளியாக நகைத்து) எங்களிடத்தில் கடன்கட்டு வியாபாரமே கிடையாதென்பது உமக்குத் தெரியாதா கையிலே காசு வாயிலே தோசை என்கிறபடி வெள்ளையப்பனை இந்தக் கையில் போடும்; புஸ்தகத்தை அந்தக் கையில் போடுகிறேன். ஒரே பேச்சு, மறு பேச்சில்லை. ஜெமீந்தார்:- நான் ஜெமீந்தார் என்பதையும், பெருத்த பணக்காரன் என்பதையும் நீ எப்படியோ தெரிந்து கொண்டி ருக்கிறாய். அப்படியிருந்தும், நீ இந்த இரண்டாயிரம் காசுக்கு என்னை நம்பமாட்டேன் என்கிறாய்? நாளைய தினம் காலையில் நீ யாரை அனுப்பினாலும் உடனே இரண்டாயிரம் ரூபாய் தடையில்லாமல் வந்து சேரும். கட்டாரி: - (புரளியாக) நான் அனுப்பும் ஆளிடத்தில் பணம் மாத்திரமா வந்து சேரும்? போலீஸ்காரன் ஒருவனும் தடை யில்லாமல் வந்து சேருவான். அது உறுதியான சங்கதியென்பது உம்முடைய மனசுக்கே தெரியும். அதெல்லாம் என்கிட்டப் பலிக்காது தாத்தா நாங்கள் அப்படிப்பட்ட கோணல் வழியி. லேயே தொழில் செய்வதில்லை. அடேகாத்தான்! நீ போய், ஒரு கடுதாசித்தாளும் அரக்கும், விளக்கும் கொண்டுவா- என்றான். உடனே ஒரு முரட்டாள் அந்த அறையை விட்டு விரைவாகப் போய் அந்த வஸ்துக்களைக்கொணர்ந்து கட்டாரி யிடத்தில் கொடுக்க அவன் அவைகளை ஜெமீந்தாரிடத்தில் நீட்டி, "ஐயா! இந்தக் காகிதத்தில் ஒர் உறை செய்து, அதற்குள் இந்த டைரிப் புஸ்தகத்தை வைத்து வாயை ஒட்டி, உம்முடைய முத்திரை மோதிரத்தால் அரக்கு முத்திரைகள்