பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 157 எந்த வீட்டுக்குள்ளிருந்து வெளியில் வந்தேன் என்பதை நீ கவனித்தாயா?" என்று ரகசியமாக வினவினார். உடனே பஞ்சண்ணாராவ், “ஆம் தெரியும். ஜெகன்மோகன விலாசத்திலிருந்து வந்தீர்கள் என்றான். கலியாணபுரம் மிட்டாதார்:- அந்த ஜாகையில் இருப்பது யார் என்பது உனக்குத் தெரியுமா? பஞ்சண்ணா: யாரோ ஒரு பெண் அந்த ஜாகையின் மேல் மாடத்தில் நின்றுகொண்டிருந்ததை நாலைந்து தடவைகளில் நான் பார்த்திருக்கிறேன். ஆனால், அவள் யார் என்பதை நான் விசாரிக்கவில்லை. க. மிட்டாதார்:- சரிதான், அவளுடைய பெயர் பூர்ணசந்திரோதயமாம். அவள்தார்வார் தேசத்து மகாராஜாவின் அபிமான புத்திரி என்று ஜனங்கள் சொல்லிக் கொள்கிறார்கள். பஞ்சண்ணா:- அபிமான புத்திரியென்றால், அந்த மகாராஜா வைப்பாட்டியாக வைத்திருந்த தாசியின் மகளோ? க.மிட்டாதார்:- (சிறிது யோசனை செய்து) அப்படித்தான் இருக்கவேண்டும். வேறுவிதமாக இருந்தால், அவள் தனியாக இவ்விடத்திற்கு வரும்படி அந்த மகாராஜா விடமாட்டார். அதுவும் தவிர, தாசிகள்தான் பூர்ணசந்திரோதயமென்ற பகட்டான பெயரை வைத்துக்கொள்ளுகிற வழக்கம். ஒழுங்கான குடும்ப ஸ்திரீயாக இருந்தால், இவள் இப்படிப் பட்ட ஆடம்பரமான பெயரை வைத்துக்கொண்டும் இருக்க மாட்டாள்; இப்படி மேன்மாடத்தின்மேல் வந்து நின்று தன்னுடைய அழகை எல்லோரும் பார்க்கும் படி விளம்பரப்படுத்திக் கொள்ளவும் மாட்டாள். பஞ்சண்ணா:- நீங்கள் உள்ளே போய் அவளோடு பேசிக் கொண்டிருந்துவிட்டு வந்திருந்தும், இப்படிச் சந்தேகமாகப் பேச வேண்டிய காரணமென்ன? இவளுடைய உண்மையான வரலாறு இன்னதென்று தங்களுக்குத் தெரியாதென்றால்,