பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 183 அவர் சொன்னவைகளை எல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்ட கோவிந்தசாமி, அவ்வாறே நடந்து கொள்வதாக உறுதி கூறியபின், அவ்விடத்தை விட்டு வெளியில் போய்விட்டான். ஜெமீந்தார் உடனே தமது இரும்புப்பெட்டியைத்திறந்து அதற்குள் இருந்து நூறு ரூபாய் நோட்டுகளில் இருபது நோட்டுகள் எடுத்து, அவைகளில் அச்சியற்றப்பட்டிருந்த நம்பர்களை ஒரு காகிதத்தில் குறித்து பத்திரமாக இரும்புப் பெட்டியில் வைத்துப் பூட்டி விட்டு இருபது நோட்டுகளையும் கற்றையாக சேர்த்துக் கட்டித் தமது சட்டைப்பைக்குள் வைத்துக் கொண்டார். அவ்வாறு அவர் அன்றைக்கு வேண்டிய சகலமான ஏற்பாடுகளையும் ஒழுங்குப் படுத்தி வைத்துவிட்டு மிகவும் திருப்தி அடைந்தவராய் உட்கார்ந்திருக்க, கடிகாரம் 8 மணி அடித்தது. ஒவ்வொருநாட் காலையிலும் தபாற்காரனால் கொண்டுவந்து கொடுக்கப்படும் கடிதங்களை யெல்லாம் ஒரு வேலைக் காரன் வாங்கிக் கொணர்ந்து காலை 8 மணிக்கு அவரிடத்தில் கொடுப்பது வழக்கம். ஆகையால் , அந்த வேலைக்காரன் வாசற்படிக்கு வெளியில் நின்றபடி, தபால் வந்திருக்கிறது; எஜமானே' என்றான். அதைக்கேட்ட ஜெமீந்தார் உள்ளே வரும்படி அவனுக்கு அது மதி கொடுக்க, அவன் ஒரு வெள்ளித்தட்டில் இருபது முப்பது கடிதங்களை வைத்துக் கொண்டு வணக்கவொடுக்கமாக உள்ளே நுழைந்து அதை அவருக்கு எதிரிலிருந்த மேஜையின் மீது மரியாதையாக வைத்துவிட்டு வெளியில் சென்றான். ஒவ்வொரு நாளும் அதேமாதிரி அவருக்கு எண்ணிறந்த கடிதங்கள் வருவது உண்டு. அவைகளுள் பெரும்பாலானவை அவரது அந்தரங்க நண்பர்களால் எழுதப்படுபவையாகவே இருக்கும். அவரோடு கூட இருந்து சந்தோஷமாக விருந்துண்டு பொழுது போக்கிவிட்டுப் போவதற்காக, அவரது நண்பர்கள் ஒவ்வொரு நாளும் அவரது மாளிகைக்கு வருவது வழக்கம். தாங்கள் எத்தனை மணிக்கு வருகிறோம் என்பதை அவர்கள்