பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 185 கொள்ளுகிறேன். மற்ற விவரங்களை எல்லாம் முகதாவில் தெரிவித்துக் கொள்ளுகிறேன். - உங்களிடம் உண்மையும் பணிவும் உள்ள பெண் லீலாவதி என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தைப் படித்த ஜெமீந்தார் கரை கடந்த மகிழ்ச்சியும் மன இளக்கமும் கொண்டவராய், “ஆகா! லீலாவதியைப் பார்க்க வேண்டும் என்று நான் எவ்வளவு காலமாக ஆசைப்பட்டுக் கொண்டிருந்தேன். அவள் இருக்கிற இடம் தெரியாமல் அல்லவா இருந்தது. நல்ல வேளையாக அவளே வருகிறாள். வரட்டும். எனக்கு வேறே நாதி யார் இருக்கிறார்கள்? என்னுடைய சொந்தக்காரர்கள் என்று சொல் லிக் கொள்ள இந்த லீலாவதியையும் இவளுடைய அண்ணனான கலியாண ராமனையும் தவிர, வேறு யார் இருக்கிறார்கள்? எனக்கோ பெண்டு பிள்ளைகள் ஒருவரும் இல்லை. என்னுடைய அபாரமான சொத்துகள் எல்லாம் கடைசியில் இவளுக்கும், கலியாணராமனுக்குமே போய்ச் சேரப்போகிறது. என் குழந்தைகளாக இருந்தால் என்ன? என்னுடைய தம்பியின் குழந்தைகளாக இருந்தால் என்ன? அவர்களுக்கும் தாய் தகப்பன் முதலிய யாருமில்லை. நான் ஒருவன்தானே அத்திப் பூத்ததுபோல அவர்களுக்குப் பெரியப்பனென்று இருக்கிறேன். இவளும் இவளுடைய அண்ணனும் என் மனசுக் குப் பிடிக்காத சில தவறுகளைச் செய்திருக்கிறார்கள் ஆனாலும், அதற்காக நான் எவ்வளவு காலம்தான் இவர்களிடத்தில் வருமம் பாராட்டுகிறது. இந்த லீலாவதி என்னிடத்தில் வைத்துள்ள வாத்சயல்யத்துக்கும் பயபக்திக்கும் அளவுண்டா? இந்த உலகத்தில் இவளொருத்தி விஷயத்திலேதான் என் மனசில் எப்போதும் குறை யா வாஞ்சை இருந்து வருகிறது. சில வருஷங்களுக்கு முன் நான் கடுமையான நோயில் பட்டு, படுத்த படுக்கையாகக் கிடந்த காலத்தில் என்னைக் காப்பாற்றுவதற்கு இவள் இரவுபகல்