பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 -வது அதிகாரம் கபட சந்நியாசி கமலம் என்ற அழகிய மடந்தை தனது தங்கையான ஷண்முக வடிவு என்னும் அருங்குணமணியைத் தனியாக விடுத்துப் பிரிந்து தஞ்சைமா நகரத்திற்குச் சென்றபிறகு இரண்டு மாதகாலம் கழிந்தது. அந்தக் காலத்தில் ஷண்முகவடிவு எப்படி இருந்தாள் என்பதைக் கவனிப்போம். அந்த இளையநங்கை, தனது அக்காள் தனிமையில் தூரதேசத்திற்குப் போன விஷயத்தில் மிகுந்த கவலையும் சகிக்க இயலாத வேதனையும் கொண்டவளாய் அன்றைய தினமும் மறுநாள் முழுதும் ஏங்கித் தவித்திருந்து மூன்றாம் நாட் காலையில் தபால்காரனது வருகையை மிகுந்த ஆவலோடு எதிர் பார்த்தவளாய் சஞ்சலக் கடலில் மூழ்கியிருந்தாள். ஒவ்வொரு நாளும் காலை பத்து மணிக்குத்தான், தபாற்காரன்அந்த வழியாகப் போவது வழக்கம் என்பதை அறிந்தவளானாலும், அந்த அழகிய மடமான், நெடுநேரத்திற்கு முன்னாகவே, ராஜபாட்டையின் பக்கத்தில் போய் நின்று, அவன் வரக்கூடிய திக்கிலேயே தனது பார்வையைச் செலுத்திக்கொண்டிருந்தாள். அவளது திரேகம் கட்டிலடங்காமலும் வீட்டின் அலுவல்களைச் செய்யமாட்டா மலும் தத்தளிக்க அவளது மனம் முழுவதும் அவளது அக்காளின் விஷயத்திலேயே லயித்துநின்றது. அப்படிப்பட்ட மகா பரிதாபகரமான நிலைமையில் ஷண்முகவடிவு நிற்க நெடுந்துரத்திற்கு அப்பால் தபாற்காரன் வந்தது தெரிந்தது. உடனே ஷண்முகவடிவின் மனம் ஆனந்தத்தால் பொங்க அவளது சரீரம் கட்டிலடங்காமல் பூரித்தது. ஆனால், அப்படி ஏற்பட்ட மகிழ்ச்சி அடுத்த நிமிஷத்தில் இல்லாமல் போய்விட்டது. தனது அக்காளிடத்தி லிருந்து அவன்தனக்கு ஏதேனும் கடிதம் கொண்டுவருகிறானோ இல்லையோ என்ற சந்தேகம் வலுவாக எழுந்து அவளது