பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 217 அத்தை முதலியோர் செளக்கியமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். உனக்கு எல்லா விஷயங்களையும் விஸ்தாரமாக எழுதியனுப்ப எனக்கு இன்றையதினம் அவகாசப்படவில்லை. ஆகவே, நீ என் விஷயத்தில் கொண்டிருக்கக்கூடிய ஆவலைத் தீர்ப்பதற்குரிய முக்கியமான சங்கதியைச் சுருக்கமாகத் தெரிவித்து விடுகிறேன். சோமசுந்தரம் பிள்ளை என்ற நமது உபகாரியை நான் கண்டுபிடித்துவிட்டேன். அவர் அன்பும், சரஸகுணமும், கண்ணியமும் வாய்ந்த ஒருதக்க பெரிய மனிதர்; நம்முடைய விஷயத்தில் அவர் வைத்திருக்கும் பட்சத்திற்கும் ஆதரவிற்கும் அளவில்லை. அவர் என்னைக் கண்டு அடைந்த ஆனந்தத்திற்கும் அளவே இல்லை. நமக்கு வந்துகொண்டிருந்த பணம் நின்றுபோனது என்பதைக் கேட்டு, அவர் கரைகடந்த விசனம் அடைந்ததன்றி, அந்தத் தவறு வேண்டுமென்று செய்யப்பட்டது அல்ல என்று கூறி, அதனால் நமக்கு ஏற்பட்ட அசெளகரியங்களையும் கஷ்டங்களையும் குறித்து, அவர்நிரம்ப வருந்துவதாகவும் தெரிவித்தார். உங்களுடைய அவசரச் செலவுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளும்படி நூறு ரூபாய்க்கு ஒர் உண்டியல் எழுதிக் கொடுத்து, அதை முதலில் உங்களுக்கு அனுப்பும் படி அவர் என்னை வற்புறுத்தினார். ஆதலால், அவருடைய விருப்பத்திற்கிணங்க, அதை நான் இந்தக் கடிதத்திற்குள் அடக்கம் செய்து அனுப்பி இருக்கிறேன். அவரைவிட அவருடைய சம்சாரம் பதின்மடங்கு அதிக அன்பும் நன்மையும் நிறைந்தவளாக இருக்கிறார்கள். அவர்கள் இருவரும், நான் உடனே ஊருக்குப் போகக் கூடாது என்று வற்புறுத்தித் தடுக்கிறார்கள். ஆகையால், நான் இன்னம் சில வாரங்கள் வரையில் அவர்களோடு கூட இருந்துவிட்டுத்தான் புறப்பட்டு வரும்படியாக இருக்கிறது. நம்மிடத்தில் அளவிறந்த அன்பை வைத்துள்ள பரம நண்பர்களும் இதுவரையில் நம்மைக் காப்பாற்றிவந்த பேருபகாரிகளுமான அவர்களுடைய பிரியத்துக்கு மாறாக, நான் எப்படி நடக்கிறது? அவர்களுக்கும் நமக்கும் எவ்வித உறவுமுறையாவது பாத்தியமாவது