பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 227 வருகிறார்களோ என்ற சந்தேகம் ஓங்கியது. அந்த ஒரு நிமிஷ நேரமும், அவளுக்குச் சகிக்க இயலாத நரக வேதனையாக இருந்தது. அடுத்த நிமிஷத்தில், அந்த முரடர்கள் மயங்கி மயங்கிக் கீழே சாய்ந்து சாய்ந்து நிமிர்ந்து தட்டுத் தடுமாறி நடந்து அவள் இருந்த இடத்திற்கு வந்து அவளை வளைத்துக் கொண்டனர். குடிவெறியினால் அவர்களது கண்கள் இரத்தமாகச் சிவந்திருந்தன; அவர்கள் அவளைப் பார்த்துப் பேச முயன்றால், விழிகள் வேறொரு திக் கை நோக்கின; அவர்கள் இன்னதுதான் பேசுகிறார்களென்பதும், அவர்களது விருப்பம் என்ன வென்பதும் தெரியாதபடி, அவர்கள் எல்லோரும் தாறுமாறாகக் குழறிப் பேசிக்கொண்டு, அவளைத் தொட்டுப் பிடிக்க யத்தனித்தனர். மகா அபாயகரமான தனது நிலைமையை உணர்ந்துகொண்ட ஷண்முகவடிவு கதிகலங்கிக் குடல்நடுக்கம் அடைந்து ஒரு பக்கமாக ஒதுங்க முயன்றவளாய், “யாரையா நீங்கள்? என்னை ஏன் இப்படி உபத்திரவிக்கிறீர்கள்? நான் தனியாக வருகிறேன் என்று நினைத்து இப்படிச் செய்கிறீர்களா? என்னைச் சேர்ந்த மனிதர்கள் இதோ பின்னால் வருகிறார்கள். தூர விலகிப் போங்கள். கிட்ட வரவேண்டாம்' என்று அதட்டிக் கூறி விரைவாக நடக்கலானாள். அவர்கள் அவளை விடாமல் சூழ்ந்துகொண்டு மிகுந்த இறுமாப்பும், களிவெறியும் கொண்டு அவளைச் சுற்றிச்சுற்றி வந்து கெக்கலிகொட்டி ஆர்ப்பரிக்கத் தொடங்கினர். ஒருவன், 'அடி என் கூத்தியாரே! நீ இப்படி ஓடினா, ஒன்னே உட்டுடுவேனுன்னு பார்த்துக்கிட்டியா? எடுடி முட்டாயிப் பொட்டலத்தே வெளியே' என்றான். இன்னொருவன், 'பொடவெத்தலப்பிலே எம்பிட்டு ரூவா முடிஞ்சு வச்சிருக்கே? அவிரு முடிச்செ' என்றான். வேறொருவன், “மரியாதெயா, எல்லாத்தியும் கீளே வச்சிடு; இல்லாமெப்போனா, மென்னியை ஒறந்துடுவோம் ' என்றான். மற்றொருவன், 'பொண்ணு பஞ்சவருணக்கிளி கணக்கா இருக்கறாடா ரூவாகீவா யெல்லாம் நீங்க எடுத்துக் கிட்டு பொண்ணே மாத்தரம் எனக்கு