பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 பூர்ணசந்திரோதயம்-1 உட்டுடுங்கடா நான் இவளே அதோ தெரியுதே அந்த மண்டவத்துக்குத் தூக்கிக்கிட்டு போயிட்றேன்' என்றான். இவ்வாறு அந்தக் குடியர்கள் தாறுமாறாக உளறிக்கொண்டு அவளைப் பிடிக்க யத்தனிக்க, அவள் அவர்களது கையில் பிடிபடாமல் இடுக்கில் நுழைந்து அங்குமிங்கும் பாய்ந்து ஒட முயன்றாள். அந்தக் குடியர்களது கைகால்களெல்லாம் கட்டி லடங்காமல் தாறுமாறாகச் சென்றமையால் அவள் அவர்களது கையில் அகப்படாமல் மான்குட்டி துள்ளுவது போலத் தப்பி ஒட, கடைசியாக அவர்கள் முன்னிலும் அதிக ஊக்கத்தோடு பாய்ந்து நெருங்கி, அவளை விடாமல் தடுக்க, அவர்களுள் ஒருவன் கடைசியாக அவளது இடுப்பின் புடவையை இறுகப் பிடித்துக்கொள்ள அவள் உடனே, "ஐயோ! ஐயோ! அக்கிரமம் செய்கிறார்களே யாருமில்லையா? ஒடிவாருங்கள்' என்று பிரமாதமாகக் கூச்சலிட்டுத் தத்தளித்துத் தன்னை விடுவித்துக் கொள்ள முயல, அதற்குள் அந்த முரடர் யாவரும் நெருங்கி, அவளது கைகளிலும் மடியிலும் இருந்த மிட்டாயிப் பொட்டலம் முதலிய சாமான்களையும் மிகுதியிருந்த பணத்தையும் பறித்துக் கொண்டிருந்தனர். அவர்களது கையில் அகப்பட்டுத் தத்தளித்துக் கொண்டு கூக்குரல் செய்திருந்த மெல்லியலாளான ஷண்முக வடிவு, 'ஐயா, என்னை விட்டு விடுங்கள்; என்னிடம் இருக்கும் பணம், சாமான்கள் எல்லாவற்றையும் நானே கொடுத்து விடுகிறேன். என்னைத் தொடவேண்டாம்” என்று எவ்வளவோ பாடுபட்டுக் கதறியதெல்லாம் செவிடனது காதில் ஊதப்பட்ட சங்கநாதம் போலாயிற்று. அவளை மண்டபத்திற்குத் துக்கிக்கொண்டு போவதாகச் சொன்னமுரடன் அவள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு மிகுந்த மூர்க்கமும் ஆவேசமும் கொண்டு, "ஓ! நீ பணத்தையெல்லாம் குடுத்துட்டா, ஒன்னே உட்டுடுவோ மின்னு பாத்துக் கிட்டியா? அது பலிக்காது ஆத்தா அதோ தெரியுது பாரு மண்டவம். அதுலே, ஒன்னெக் கொண்டு போயி இன்னக்கி ராத்திரி முளுதும், வச்சிருந்து விடியக்ககத்தாலேதான்