பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 229 அனுப்பப்போறோம். நீ கெண்டக் குஞ்சு கணக்காத் துள்ளிக் குதிக்கறத்துலே பெரயோசனம் ஒண்ணுமில்லே தங்கமே! நல்ல ஒடம்பெக் கெடுத்துக்காமே, நீயே நடந்து வந்துடு' என்று கூறியவண்ணம், அவளது மாராப்புச் சேலையைப் பிடித்து இழுக்க அவள் முன்னிலும் பதின்மடங்கு அதிகமாகத் துள்ளிக் குதித்து, ஓங்கிக் கூச்சலிட்டுக் கதறலானாள். குடியர்களும் முன்னிலும் அதிக ஊக்கமாக அவளிடத்தில் நெருங்கி அவளது புடவையை மூலைக்கொருவராகப் பிடித்து இழுக்க, இன்னம் ஒரு நிமிஷத்தில் தனது மானம் போய்விடுமென்ற பெருந் திகிலும், திகைப்பும் கொண்டவளாய், அந்த மடந்தை புலிக் கூட்டத்தின் நடுவில் அகப்பட்டுக் கொண்ட மான் போல உயிருக்கு மன்றாடி ஒலமிட்டு அலறிய தருணத்தில் கள் கடை இருந்த திக்கிலிருந்து யாரோ ஒருவர் பெருத்த கூக்குரல் செய்து அதட்டிக்கொண்டு அவர்களை நோக்கி ஓடிவந்தது தெரிந்தது. அப்படி ஓடிவந்த மனிதர், அடே பயல்களா! ரஸ்தாவில் போகிறவர்களையெல்லாம் இப் படித்தானா வழிமறித்து அக்கிரமம் செய்கிறது? விடுங்கள் அந்தப் பெண்ணை; தொடாதீர்கள் குடிகார நாய்களா: பட்டப் பகலிலேயே கொள்ளையடிக்க ஆரம்பித்து விட்டீர்களா? ஆகா இவ்வளவு தூரத்துக்கு வந்துவிட்டதா?’ என்று கூறி அதட்டிக் கொண்டே வர, தனக்கு யாரோஒருவர்துணை செய்ய வருகிறார் என்பதைக் காணவே, ஷண்முகவடிவிற்கு உயிர் திரும்பியது. அவள் நல்ல மூச்சாக விடுத்தது அன்றி, மிகுந்த துணிவும், - வலுவும் கொண்டவளாய், முன்னிலும் அதிகமாகத் திமிறத் தொடங்கினாள். அப்போது அந்தத் திருடர்களுள் ஒருவன், "அடேய் ஆள் வருதுடோய். இன்னமே நிக்கப்படாது. வாங்கடா ஒடிப் போவோம்' என்று கூற, உடனே அந்தக் குடியர்கள், அந்த மடந்தையி னிடத்திலிருந்து பிடுங்கிய சாமான்களை எடுத்துக் கொண்டு மூலைக்கொருவராகப் பிரிந்து ஒடத்தலைப்பட்டனர். 'விடாதே விடாதே பிடி பிடி' என்று ஓங்கிக் கூச்சலிட்டவராய்,