பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 231 அவளது சொற்களைக் கேட்ட பண்டாரம், அன்பாகப் புன்னகை செய்து, 'பெண்ணே பயப்படாதே இனிமேல் உனக்கு எவ்விதக் கெடுதலும் உண்டாகாது; நானிருக்கிறேன். ஆயிரம் மனிதர் வந்தால் கூட நான் ஒரு கை பார்த்து விடுகிறேன். என்னுடைய உயிர் இருக்கிறவரையில் நீ பயப்படத் தேவையில்லை. நான் அப்போதே சொன்னேன். அதை நீ கேட்கமால், தனிவழி நடந்து வந்தாய். இந்த இடத்தில் இந்தக் குடியர்கள் இப்படி அடிக்கடி செய்கிறார்கள் என்று நான் கேள்வியுற்றிருக்கிறேன். உனக்கு ஏதாவது இடைஞ்சல் உண்டாகப் போகிறதே என்ற கவலையோடு தான் நான் வந்தேன். நீ வருவாய் என்று, நான் வழியில் நெடுநேரமாக இருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். இவ்வளவு பொழுது சாய்ந்தும் நீ வராததைக் கண்டு, ஒருகால் யாராவது பந்துக்களின் வீட்டில் நீ ராத்திரிக்குத் தங்கியிருப்பாய் என்று நினைத்துத் தேறுதல் அடைந்தேன். அதற்குள் என்னுடைய உடம் பில் ஒருவித உபாதை உண்டாயிற்று. இதோ பக்கத்திலிருக்கும் ஆற்றங்கரைக்குப்போய் கை கால் சுத்தி செய்து கொண்டு ரஸ்தாவோடு வந்து கொண்டிருந்தேன். கள் கடையண்டையில் வந்தபோது, தற்செயலாக நான் இங்கே பார்க்க, இவர்கள் உன்னை வளைத்து உபத்திரவப்படுத்திக் கொண்டிருந்தது தெரிந்தது. நான் உடனே கள் கடையண்டை போய் தடிக்கம்பை எடுத்துக்கொண்டு ஒரே ஒட்டமாக ஓடி வந்தேன். என்னைக் கண்டவுடனே இவர்கள் நல்ல வேளையாக ஒடிப் போய் விட்டார்கள். நான் இன்னம் கொஞ்சநேரம் வராதிருந்தால், நீ சொன்னபடி இந்நேரம் இவர்கள் உன்னை என்ன கோலத்துக்கு ஆளாக்கி யிருப்பார்களோ தெரியவில்லை. என்னவோ தெய்வச் செயல்தான் இந்த அபாயம் இவ்வளவோடு நீங்கியது. இனிமேல் நீ திருவாரூருக்கு வரவேண்டுமானால், யாரையாவது துணைக்கு அழைத்துக்கொண்டு வரவேண்டுமே அன்றி இப்படித் தனியாக வரவேண்டாம். அது போகட்டும்;