பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 233 அதைக் கேட்ட ஷண்முகவடிவு தான் என்ன செய்வது என்பதை அறியாமல் சிறிதுநேரம் தயங்கிநின்றபின், 'சுவாமிகள் கோபிக்கப்படாது. என்னுடைய வீட்டில் என் அத்தை தேக அசெளக்கியமாகப் படுத்திருக்கிறார்கள். அவர்கள் நகருகிறதும் இல்லை, பேசுகிறதும் இல்லை; ஆகாரத்தை அவர்களுடைய வாயில் போட வேண்டும். அப்படிப்பட்ட நிலைமையில் உள்ள அவர்களை நான் வேலைக்காரி வசம் விட்டு வந்து நெடுநேரமாகிவிட்டது. நான் உடனேபோப் அவளை அனுப்ப வேண்டும். பணமும் சாமானும் போனால் போகட்டும். நான் அவசரமாக ஜாகைக்குப் போக வேண்டும்.இந்தத் திருட்டைப் பற்றித் தாங்கள் யாரிடத்திலும் பிரஸ்தாபிக்க வேண்டாம். ஆனால், சுவாமிகளுக்கு நான் ஒரே ஒரு விஷயத்தில் சிரமம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இவ்வளவுதூரம் காரியம் நடந்தபிறகு இனி தனியாக ஜாகைக்குப் போக எனக்குப் பயமாக இருக்கிறது. தாங்கள் என்னை என்னுடைய வீட்டில் கொண்டுபோய் விட்டால், அது இப்போது செய்தது போன்ற இன்னொரு பெரிய உதவியாகும்’ என்று நயமாக வேண்டிக் கூறினாள். அதைக் கேட்ட பண்டாரம், 'அம்மா குழந்தாய்! உன்னை இந்த இடத்தில் தனியாக விட்டுவிடுவேனா? உன்னுடைய ஜாகையில் கொண்டுபோய் விடும்படி நீ என்னிடத்தில் கேட்டுக் கொள்ளவும் வேண்டுமா? நீ கொஞ்சமும் கவலை கொள்ள வேண்டாம்; உன்னைநான் பத்திரமாக உன்னுடைய ஜாகையில் கொண்டுபோய்ச் சேர்க்கிறேன்; ஆனால் இன்னொரு விஷயம் இருக்கிறது. இந்தக் குடியர்களை இப்போது நாம் சும்மா விட்டுவிடுவோமானால் பிறகு அவர்களுக்கு இளக்காரம் ஆகிவிடும்; ஒருவித துணிவும் ஏற்பட்டு விடும். அவர்கள் நாளைய தினம், உன்னுடைய ஜாகைக்குள் புகுந்து கொள்ளையடித்து, இல்லாத பொல்லாத அக்கிரமங்களை யெல்லாம் செய்யத் தலைப்படுவார்கள். ஆகையால், இப்போதே நாம் போய்ப் பெரிய பண்ணை பிள்ளையிடத்தில்