பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 2 53 காலத்தில் திரும்பி வராத விஷயமும் சேர்ந்து, அவளது மனதில் பலவகைப்பட்ட நினைவுகளையும் சந்தேகங்களையும் உண்டாக்கி அவளது மனதைக் கலக்கிப் புண்படுத்தின. முன் கட்டில் தனியாக இருப்பதைப்பற்றி தான் அச்சங் கொள்ளாமல் தைரியமாக இருக்கவேண்டுமென்று பண்டாரம் நினைத்து ஒருவேளை அவ்வாறு பொய் சொல்லி இருப்பாரோ என்ற யூகமும் உண்டாயிற்று. அதுதான் உண்மையாக இருக்க வேண்டுமென்றும், பண்டாரம் தனக்கு நன்மையை நாடியே அவ்வாறு பொய் சொல்லியிருக்கிறாரென்றும் தீர்மானித்துக் கொண்ட அந்தப் பெண்மணி கொல்லைப்பக்கம் வரையில் போய்ப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்துவிட வேண்டுமென்ற விருப்பம் கொண்டவளாய்க் கையில் பிடித்த விளக்கோடு முற்றத்தின் வழியாக நடக்கலானாள். தான் அங்கே இருக்கும்போது, வெளியில் போன பண்டாரம் வாசலில் வந்து ஒருவேளை கதவைத் தட்டுவாரோ என்ற நினைவும் தோன்றியது. ஆகையால், அவள் அடிக்கடி பின்புறம் திரும்பிக் கதவு தட்டப்படுகிற ஓசை கேட்கிறதோ என்று உற்றுக் கவனித்தவளாய் முற்றத்தின் வழியாகக் கொல்லைக் கதவை நோக்கி நடக்க, அப்போது திடீரென்று வீசிய காற்றினால் அவளது கையிலிருந்த விளக்கு அணைந்துவிட்டது. அந்த இடம் முழுதும் இருள் கப்பிக் கொண்டது. மிகவும் இருண்டு பயங்கரமாக இருந்த அந்தக் கட்டிடத்திற்குள் தான் தனியாக நிற்க நேர்ந்ததைப் பற்றி நமது மெல்லியலாள் நடுநடுங்கித் தத்தளிக்கலானாள். தான் கொல்லைக் கதவைத் திறந்து பார்க்க இயலாது என்ற நிச்சயம் ஏற்பட்டது: தான் திரும்பி முன் கட்டிற்கே போய்விடவேண்டுமென்ற எண்ணம் தோன்றியதா னாலும், தான் கொல்லைக் கதவு வரையில் போய், அது எந்தப் பக்கத்தில் தாளிடப்பட்டிருக்கிறது என்பதையாகிலும் பார்த்தறிந்து கொண்டு போகவேண்டும் என்ற ஓர் அவா உண்டானது. ஆகையால், அவள் இருளில் தட்டுத்தடுமாறி மெதுவாக நடந்து கொல்லைக்கதவு இருந்த