பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 பூர்ணசந்திரோதயம்-1 அவளுடைய தங்கை என்றும் சொன்னபிறகுதான், உண்மை தெரிந்தது. இவள் அக்காளாக இருந்தால் என்ன? தங்கையாக இருந்தால் என்ன? வித்தியாசம் ஒன்றுமில்லை. இருவருடைய வடிவமும் அழகும் ஒரேமாதிரியாக இருப்பதால், என்மனசிலி ருந்து என்னைக் கொன்று கொண்டிருக்கும் தாகவிடாயைத் தீர்த்து வைக்க இவளும் போதுமானவள்தான். ஆனால், இவள் மகா நற் குணமுள்ள பரம சாதுவாக இருக்கிறாள். இவள் என்னைத் தெய்வமென்றே நினைத்துக் கடைசிவரையில் நம்பி இங்கே வந்திருக்கிறாள். நான் வேறே வித்தியாசமான வார்த்தையை எடுத்தால், இவள் சம்சயம் அடைந்து என்னோடுகூட இங்கே வராமல் போய்விடுவாளோ என்று நினைத்து, நான் இவளுடைய மனம் நம்பும் படி பக்குவமாகப்பேசி அழைத்துக்கொண்டு வந்திருக்கிறேன். இவள் கம்பங் கொல்லையில் பயிர்களுக்கு மத்தியில் அகப்பட்டுக் கொண்டு தவித்தபோது, நான் போய் இவளை அழைத்துக் கொண்டு வந்த சமயம், இவளை அப்படியே பிடித்து இழுத்துக் கட்டிக்கொள்ளவேண்டும் என்று என்னுடைய மனம் துடித்தது; உடம்பும் பதறியது. எனக்கு வேறே யாரும் துணையில் லாதிருந்தபடியால், அங்கே பலவந்தம் செய்தால், காரியம் பலியாமல் போய்விடுமோ என்று அஞ்சி இவளை மரியாதையாக அழைத்துக்கொண்டு வந்தேன். இப்போதும், நான் பெரிய பண்ணைப்பிள்ளையை அழைத்து வரப்போயிருப்பதாகத்தான் இவள் மனப் பூர்வமாக நினைத்துக் கொண்டிருப்பாள். நாம் இவ்வளவு தூரம் தந்திரம் செய்து அழைத்துக் கொண்டு வந்திருக்கிறோம். ஆனால், மேல் காரியத்தை எப்படி நடத்துகிறது என்பது தெரியவில்லை. என்னுடைய கருத்தை இவளிடத்தில் எப்படி வெளியிடுகிறது என்பதும் தெரியவில்லை. நான் துணிந்து வெளியிட்டாலும், இவள் அதற்கு இணங்கக் கூடியவளாகத் தோன்றவில்லை. நான் பலவந்தம் செய்தால், இவள் ஓங்கிக் கூச்சலிடுவாள்;