பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 பூர்ணசந்திரோதயம்-1 அவளது சொற்களைக் கேட்ட சூரக்கோட்டைப் பாளையக்காரர் முன்னிலும் பன்மடங்கு அதிகரித்த ஆத்திரமடைந்தவராய் மறுபடியும் அவளுக்கு எதிரில் போய் நின்று வழிமறித்துக் குறும்பாகவும் புரளியாகவும் புன்னகை செய்து, "அடேயப்பா நீ என்ன எவருக்கும் கிடைக்காத மகா சீமைச்சரக்காக இருக்கிறாயே! நீ என்ன இந்த பூலோகத்தில் எங்களைப் போன்ற சாதாரணமான மனிதர்களுக்குப் பிறந்து இந்த பூலோகத்திலேயே வளர்ந்து பூலோகத்திலேயே இருப்பவளாக நினைக்கவில்லை போலிருக்கிறது! நீ கலியாணம் செய்துகொள்ளக்கூடிய மனிதன் தெய்வ லோகத்தி லிருந்து நேராக இறங்கி வரப் போகிறானா? அவனுக்கு மாத்திரம் முகத்தில் இரண்டு கொம்புகள் முளைத்திருக்குமா? அவனும் எங்களைப் போலத்தானே மனுஷனாக இருப்பான். அவனுடைய தலை ஒருவேளை அவனுடைய வயிற்றில் முளைத்திருக்குமா? என்ன இருந்தாலும், உனக்கு இவ்வளவு கர்வமும், ஆணவமும் ஆகாது. நான் நல்ல வார்த்தை சொல்ல வந்தால் கூட, என்னவோ நான் உனக்குப் பெருத்த கெடுதல் செய்துவிட்டது போல நினைத்து மகா எரிச்சலாகவும், ஆத்திரமாகவும், அலட்சியமாகவும் பேசுகிறாயே! நான் ஒன்று கேட்டால், நீ வேறொன்று சொல்லுகிறாய். கடைசியாக நான் கேட்ட கேள்விக்கு நீ சரியான உத்தரம் சொல்லாமல், நான் கிளி பிடிக்கிற குருவிக்காரன் போலத்தான் இருக்கிறேன் என்றும், பெண்களைப் பிடிக்க எனக்கு வழி தெரியாது என்றும் மகா இறுமாப்பாகப் பேசிவிட்டு, பேய், பிசாசுகளைக் கண்டு ஒடுகிறவள்போலப் பயந்துகொண்டு பறக்கிறாயே! நான் இன்னானென்பதை நீ தெரிந்து கொண்டும் , கொஞ்சமும் மட்டுமரியாதை இல்லாமல் ஒரு பிச்சைக்காரனிடத்தில் பேசுவதுபோல எண்ணிப் பேசிவிட்டா யல்லவா? நான் பிறந்தது முதல் இந்த நிமிஷம் வரையில் இப்படிப்பட்ட அவமரியாதையான வார்த்தைகளை எப்பேர்ப்பட்டவ ரிடத்திலும் கேட்டறியேன். இப்படிப் பேசியவள், நீயாக