பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 15 அதைக் கண்ட அந்தச் சேவகன் அந்த மேற்கு ராஜவீதியிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் இன்னின்னார் இருக்கிறார்களென்பது தனக்குத் தெரியுமென்றும், சோமசுந்தரம் பிள்ளையென்ற மனிதரே அந்த வீதியில் இல்லையென்றும் உறுதியாகக் கூறினான். அதைக் கேட்ட கமலத்தின் குழப்பமும் கலக்கமும் முன்னிலும் பன்மடங்கு அதிகரித்தன. அந்த மடமங்கை நிலை கலங்கிச் சிறிது நேரம் அப்படியே நின்று சிந்தனையில் ஆழ்ந்தபின், அந்தச் சேவகனைப் பார்த்து, 'ஐயா மேற்கு ராஜவீதியில் 20-ம் இலக்கத்திலுள்ள சோமசுந்தரம் பிள்ளைக்குக் கொடுப்பதென்று ஏதாகிலும் கடிதங்கள் இந்த வீட்டிற்கு வந்ததுண்டா? அதையாகிலும் தெரிவி' என்றாள். அந்த வேலைக்காரன் அப்படிப்பட்ட கடிதம் எதுவும் அங்கே வந்ததே இல்லையென்று மிகவும் நிச்சயமாகவும் உறுதியாக வும் உடனே கூறிவிட்டான். அதற்குமேல் தான் என்ன செய்வ தென்பதையும், அந்த மர்மத்தை என்னவென்று யூகித்துக் கொள்வதென்பதையும் உணராமல், அந்தப் பெண்மணி தவித்தாளானாலும், தான் எப்பாடு பட்டாகிலும் அந்த விஷயத்தை முற்றிலும் ஆராய்ச்சி செய்தே தீர வேண்டுமென்ற உறுதிகொண்டவளாய் அந்த வேலைக் காரனை நோக்கி, அந்த மாளிகையின் சொந்தக்காரரான பவானியம்பாள்புரத்தின் ஜெமீந்தாரிடத்தில் தான் இரண்டொரு நிமிஷம் நேரில் பேசும்படி செய்துவைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ள, உடனே அந்த வேலைக்காரன் கமலத்தை நோக்கி, 'அம்மா! என்னுடைய எஜமானர் சில வாரங்களாக ஊரில் இல்லை. வெளியூருக்குப் போயிருக்கிறார். அவர் எப்போது திரும்பி வருவார் என்பது இப்போது நிச்சயமாகத் தெரிய வில்லை. ஆனால் அவருடைய குமாரர்தான் உள்ளே இருக்கிறார். அவரை வேண்டுமானால் பாருங்கள் என்றான். கமலம் அதற்கு இணங்க, உடனேசேவகன் உள்ளேபோய்த் திரும்பிவந்து, அந்த மடந்தையை அழைத்துக்கொண்டு உட்புறத்தில் நுழைந்து மேன்மாடத்திற்குச் சென்று அவ்விடத்தில் மிகவும் அழகாகவும்