பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 315 "இந்த விஷயத்தில் அவர் ஒருவர் மாத்திரம் தவறு செய்ததாகத் தோன்றவில்லையே! அவர்கள் அறுவருக்குள் நடந்த இந்த ரகசியம் தங்களுக்கும் தெரிந்திருக்கிறதே. இந்த அறுவரில் ஒருவர்தானே இதைத் தங்களிடத்தில் வெளியிட்டிருக்க வேண்டும். அப்படியிருக்க, சூரக்கோட்டைப் பாளையக்காரர் ஒருவரை மாத்திரம் தண்டிப்பது நியாயமாகுமா?" என்றாள். அந்தப் பெருமாட்டி திடுக்கிட்டுத் தயங்கி, 'ஆம்: கண்டிப்பாகப் பார்த்தால் நீங்கள் சொல்வது நியாயந்தான். இருந்தாலும் இரண்டிற்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது. இளவரசருடைய ரகசியமெல்லாம் எனக்குத் தெரியும். அவருடைய மனமும் என்னுடைய மனமும் ஒன்றுதான். ஆகையால், அவர் எந்த விஷயத்தையும் என்னிடத்தில் சொல்லாமல் இருக்கமாட்டார். ஒரு விஷயம் அவருக்கு மாத்திரம் தெரிந்திருந்தால், அது எவ்வளவு ரகசியமாக இருக்குமோ அதுபோலவே, நானும் அந்த ரகசியத்தைக் காப்பாற்றி வருவேன். ஆகையால், எங்களிருவருக்கும் தெரிந்தால், ஒரே ஒருவருக்கு மாத்திரம் தெரிந்தது போன்றதே. ஆனால், அந்தப் பாளையக்காரர் செய்தது ஒழுங்கீனமான காரியம். அந்த ரகசியம் யாருக்குத் தெரியக் கூடாதோ அவருக்கே அதைத் தெரிவித்து மற்றவர்களுடைய காரியத்தைக் கெடுத்தது சுத்த நம்பிக்கைத் துரோகமான காரியம். இருக்கட்டும்; அவருக்குத் தக்க மரியாதை நாங்கள் நடத்தி வைக்கிறோம். அது போகட்டும். நாம் முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசுவோம். இந்த ரகசியங்கள் எல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்க, இனி நான்உங்களிடத்தில் கபடமாக மறைத்து மதித்துப்பேசுவது மரியாதையல்ல. ஆகையால், வந்த காரியம் இன்னதென்பதை நான் வெளிப்படையாக உங்களிடம் தெரிவித்து விடுகிறேன். அவர் விஷயத்தில் நீங்கள் இரங்கி அவருடைய இச்சையைப் பூர்த்தி செய்வீர்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். நீங்கள் இந்த ஊருக்கு வந்திருக்கி lர்கள் என்ற சங்கதியே அவருக்குச் சென்ற ஞாயிற்றுக்