பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 பூர்ணசந்திரோதயம்-1 கிழமையன்று மற்றவர்கள் சொல்லித்தான் தெரிந்தது; உங்களுடைய அபூர்வமான அழகையும், மேம்பாட்டையும், நற் குணங்களையும், புத் தி சாதுர்யத்தையும், கல்வி முதிர்ச்சியையும் பற்றி அவர் பலருடைய வாக்குமூலமாகவும் கேட்கக் கேட்க, அப்படிப்பட்ட அபாரமான சிருஷ்டியாக இருக்கும் பெண்ணரசியைத் தமக்கு அரசியாகச் செய்து கொள்ளவேண்டும் என்ற தடுக்க முடியாத ஒர் ஆசை அவருடைய மனசில் மூர்த்தண்ணியமாக எழுந்துவிட்டது. உங்கள் விஷயத்தில் அவருடைய மனசில் பிரமாதமான காதலும் அபாரமான பிரேமையும் ஏற்பட்டு விட்டன. ராப்பகல் சதா காலமும் அவர் உங்களுடைய நினைவே நினைவாகவும் அதே பைத்தியமாகவும் இருந்து ஊண் உறக்கம் இல்லாமல் தவித்து வருந்திக் கிடக்கிறார். அவருடைய பரிதாபகரமான நிலைமையை எடுத்து உள்ள படி சொன்னால், அது உங்களுக்கு நம்பிக்கை படுமோ படாதோ! நீங்கள் எவ்வித நிபந்தனைகள் ஏற்படுத்துவ தானாலும் அவைகளுக்கு எல்லாம் அவர் இணங்கத் தடையில்லை. அவரே இன்று நேரில் வந்து உங்களிடம் பேச எவ்வளவோ ஆவல் கொண்டிருந்தார். ஆனாலும், அவர் வந்தால், மற்றவருக்குக் கிடைத்த மரியாதை தமக்கும் கிடைக்குமோ என்று பயந்து உங்களிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்ளும் படி என்னை அனுப்பினார். நீங்கள் எப்படியாவது தயை பாலித்து உயிர் அழிந்து வாடிக் கிடக்கும் அவரைக் கைதுக்கிவிட்டு உய்விக்கச் செய்வது உங்களைச் சேர்ந்த பொறுப்பு' என்று நயமாகக் கூறி இறைஞ்சினாள். பூர்ணசந்திரோதயம், 'ஆம்; தாங்கள்சொன்னது எல்லாம் உண்மைதான். அது போகட்டும்; என்னுடைய குணாதிசயங் களைக் கேட்டு என்மேல் இளவரசர் ஆசை கொண்டாரே. அதை மனசிலேயே வைத்துக்கொண்டு அரண்மனைக்கு வந்து உங்களிடம் அதைச்சொல்லி இப்போது அனுப்பியதுபோல, அப்போதே அனுப்பியிருந்தால், அது நிரம்பவும் மரியாதையாக இருக்கும். அதைவிட்டு, என்னை ஒரு சாமானைப் போல