பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுவர் கே. மி ஐயங்கா வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 517 மதித்துப் பந்தயம் வைத்து மற்ற ஐந்து பேரிடத்திலும் என்னைக் காட்டிக்கொடுத்து அவர்கள் வந்து என்னிடத்தில் அசங்கியமான பிரஸ்தாபங்களைச்செய்து என் மனசை வதைக்கும் படியான நிலைமையில் என்னை வைத்தது நியாயமாகுமா? இவர்கள் இப் படிப் பந்தயம் வைத்ததனால் சென்ற திங்கட்கிழமை யிலிருந்து என்மனம் எவ்வளவு பாடுபடுகிறது தெரியுமா?" எனறாள. அந்தப் பெருமாட்டி மிகவும் நயமாகவும் கெஞ்சலாகவும் பேசத் தொடங்கி, 'அம்மா! நீங்கள் சுமத்தும் குற்றம் ஒரு விதத்தில் நியாயமானதாக இருக்கிறது. ஆனால், அந்தச் சமயத்தில் அவர் எண்ணிய எண்ணத்தையும் நான் தெரிவித்து விடுகிறேன். உங்களைப் பற்றி மற்றவர்கள் சொன்ன விவரங்களைக்கேட்ட அவர்உங்கள் மேல் மோகங் கொண்டார். அதுபோலவே, மற்ற எல்லாரும் உங்கள் பேரில் மோகங் கொண்டு வாயில் வந்தபடி பிதற்றினார்கள். ஆனால் நீங்கள் எப்படிப்பட்ட மனவுறுதி உடையவர்கள் என்பது அவருக்குத் தெரியாது. அந்த விஷயத்தில் உங்களைப் பரீட்சித்துப் பார்த்து மற்ற எப்பேர்ப்பட்டவர்களையும் நீங்கள் உதறித்தள்ளி உறுதியான கற்போடு இருப்பீர்களா, அல்லது, சபலசித்த முடையவர்களாக இருந்து எல்லோருக்கும் இணங்கி விடுவீர்களா என்பதை நன்றாக அறிந்து கொண்டு அதன்பிறகு உங்களைத் தம்முடைய உயிருக்குயிரான ஆசை நாயகியாக வைத்துக் கொள்ள வேண்டுமென்பது அவருடைய கருத்து. இந்தப் பந்தயம் வைக்கவேண்டுமென்ற பிரஸ்தாபம் உண்டானவுடனே, இதனாலேயே உங்களுடைய கற்பின் உறுதியைச் சோதித்து விடலாம் என்ற நினைவினால் அவரும் இதற்கு இணங்கிவிட்டார்.ஆனால், இந்த விஷயத்தில் உங்களுக்கு மற்றவர்களால் துன்பமும் சங்கடமும் அவமானமும் ஏற்பட்டதைப் பற்றி இளவரசர் மனப்பூர்வமாக வருந்தி விசனிக்கிறார். இனி உங்களுக்கு இப்படிப்பட்ட துன்பம் நேராமல் பாதுகாப்பதோடு, இதுவரையில் ஏற்பட்ட