பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 25 விட்டுப் போகாமலிருந்து விடுவானோ என்ற சந்தேகமும் இன்னொரு புறத்தில் என்னை வதைத்துக் கொண்டிருந்தது. கொஞ்சநேரத்துக்குமுன், கீழே நின்று நிமிர்ந்து ஜன்னலை நான் பார்த்தபோது அடையாளத்துக்காக நீ வைத் திருக்கிறதாக எழுதியிருந்த விளக்கைப் பார்த்தபிறகுதான் எனக்கு உயிர் வந்தது. ஏதோ தெய்வாதுகூலத்தினாலேதான் நாம் இப்போதாவது ஒன்றாகக் கூடி சந்தோஷப்படுகிறோம்' என்று மிகுந்த மனநெகிழ்வோடு கூறி, அவளைவிடாமல் ஆலிங்கனம் செய்ய, அவள் தேன்குடித்த நரிபோல இன்பப் பெருக்கைத் தாங்கமாட்டாமல் அவனிடத்தில் லீலைகள் புரியத் தொடங்கினாள். - அந்தச் சமயத்தில், கீழேயிருந்து மேன்மாடத்திற்கு வரும் படிக்கட்டின் வழியாக யாரோதிடுதிடென்று அடி வைத்து ஒசை செய்து கொண்டு மேலே வந்த சப்தமும், அப்படி வந்தவர் மேன்மாடக் கதவைத் தடதடவென்று தட்டிய ஓசையும் உண்டாகவே ஒருவரையொருவர் ஆலிங்கனம் செய்தபடி மெய்மறந்து ஆனந்த சுகத்தில் ஆழ்ந்துகிடந்த கள்ளக்காதலர் இருவரும் திடுக் கிட்டுப் பிரிந்து கட்டிலை விட்டுக் கீழே இறங்கினர். இருவரது மனதிலும் பெருத்த திகில் குடி கொண்டது. குலைநடுக்கம் உண்டாகக் கைகால்களெல்லாம் வெடவெடவென்று ஆடுகின்றன. உடனே அந்தப் பெண் பதறித்தவித்துக் கைகளைப் பிசைந்து கொண்டு, "ஐயோ! அந்தக் கிழவன் வந்துவிட்டானே! என்னசெய்கிறது! கண்ணாடியைத் திறந்து கொண்டு கீழே இறங்க நேரமில்லையே! அப்படித் திறந்தாலும், அந்த ஒசையைக்கேட்டு அவன் உடனே சந்தேகம் கொண்டு என்னைக் கொன்று போட்டு விடுவானே! ஐயோ தெய்வமே என்ன செய்யப் போகிறேன்?' என்று பிரலாபித்துத் தவிக்க, அதைக் கேட்ட அந்த மனிதர், 'கண்ணே பயப்படாதே, தைரியமாக இரு நான் இங்கே வந்திருக்கிறேன் என்பது அவனுக்குத் தெரிந்திருக்காது. நீதுங்குகிறவள்போலப் பேசாமல் இரு; நான்