பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 பூர்ணசந்திரோதயம்-1 'உலகத்தில் அழகும் குணமும் எங்கே நிறைந்திருக் கின்றனவோ, அங்கே மனிதருடைய மனம் செல்வது இயற்கை தானே. அப்படியிருக்க இந்தக் கிளிகளிடத்தில் பிரியமுண்டா வென்று கூடக் கேட்கவேண்டுமா? இந்தக் கிளிகளினிடத்திலும் சரி, நல்ல புஷ்பங்களிடத்திலும் சரி, எனக்கு அத்தியந்தப் பிரியம்' என்று மிருதுவாகக் கூறினாள். கலியாணபுரம் மிட்டாதார்மறுபடியும் அவளை நோக்கி, "ஒ அப்படியா அதனால்தான் எங்கு பார்த்தாலும் அழகான கிளிகளும் புஷ்பங்களுமே மயமாக நிறைந்து கிடக்கின்றன. ஆனால், அதில் இன்னொரு விஷயமிருக்கிறது. நாம் ஒரு வஸ்துவினிடத்தில் பிரியம் வைத்தால், அந்த வஸ்து நம்முடைய பிரியத்தை உணர்ந்து, பரஸ்பரம் அதுவும் நம்மிடத்தில் பிரியம் வைத்தால்தான், நமக்கு ஆனந்தமாக இருப்பதன்றி நாம் பிரியம் வைத்ததற்கும் ஸார்த்தமாக இருக்கும். ஆனால், புஷ்பங்கள் உயிரில்லா வஸ்துக்கள்; அவைகளின் மேல் நாம் எவ்வளவு பிரியம் வைத்திருக்கிறோமென்பதை உணர அவைகளுக்கு அறிவில்லை; இந்தக் கிளிகள் கொஞ்சமாவது உணர வேண்டியது நியாயந்தான்; ஆனால், எல்லாம் ஒரே மாதிரியாக இருக்காது. அதனதன் அறிவின் முதிர்ச்சிக்குத் தக்கபடி ஒவ்வொன்றும் பரஸ்பர அன்பைக்காட்டும். இந்த விஷயத்தில் நாய் ஒன்றுதான் நிரம்பவும் சிலாக்கியமானது. ஆனால், நாய் மனிதரிடத்தில் வைக்கும் பிரியத்துக்கும் மேலானதாக ஒரே ஒரு பிரியத்தைத்தான் சொல்லலாம். மனமொத்த காதலனும் காதலியும் ஒருவர் மேல் ஒருவர் பரஸ்பரம் வைக்கும் பிரேமைதான் இந்த உலகத்திலுள்ள எல்லாவற்றிலும் மேலான சுகம்' என்று இனிமையான குரலில் கூறினார். அப்போது பூர்ணசந்திரோதயம் தான் இருந்த மாளிகையின் எதிர்ப்பக்கத்தில் இருந்த ஒரு பெருத்த சத்திரத்தின் மேன் மாடத்தைத் தற்செயலாகப் பார்த்தாள். அவ்விடத்தில், யாரோ ஒரு மனிதர் நின்று, தானும், அந்த யெளவன புருஷரும்