பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பூர்ணசந்திரோதயம்-1 பட்ட ஒருவகை தாசிகளும் வசித்து வந்தனர். அந்தக் கூத்தாடிச்சிகள் பரம்பரையாக வேஷங்கள் போட்டு நாடகம் ஆடுவதையே வெளிப்படையான பிழைப்பாக வைத்துக் கொண்டிருந்தனர். அவர்களுள் பெரும்பாலோர் கண்ணைக் கவரும் அழகும், மனதை மயக்கும் சங்கீதப் பயிற்சியும் உடையோராக இருந்தமையால், அந்த ஜில்லாவில், நூறு வேலி, ஆயிரம் வேலி நிலங்களையுடைய மிராசுதார்களும், பெருத்த பெருத்த ஜமீந்தார்களும், தனவந்தர்களும், இவர்களது மோக வலையில் சிக்கி, தத்தம்பெண்டு பிள்ளைகளை உல்லங்கனம் செய்து இந்தக் கூத்தாடிச்சிகளின் வீடே கதியாக இருந்து, தங்களது ஏராளமான செல்வத்தையெல்லாம் விரயம் செய்துவந்தனர். இந்தக் கூத்தாடிச்சிகள் காலிற்குக் காலாய்த் தாய்க்குப்பின் மகளும், மகளுக்குப்பின் பேர்த்தியும் அந்தத் தொழிலைப் பரம்பரையாக எப்படி நடத்தி, பொதுஜன ரம்மியமான அந்தப் பரோபகார ஊழியத்திற்குத் தங்களது சரீரங்களைப் பயன்படுத்தி வந்தார்களோ, அதுபோல அந்தப் பெரிய மனிதர்களும், அவர்களது பிள்ளைகளும், பேரன்மார்களும் காலிற்குக் காலாக அவர்களை வைத்து பட்சம் மறவாமல் காப்பாற்றி வந்தனர். ஒவ்வொருத்தியும் பதினாயிரம் ஐம்பதினாயிரம் பெறும் ஆடையாபரணங்களையும், நிலங்களையும், வீடுகளையும் சம்பாதித்து நல்ல நிலைமையி லிருந்து அமோகமாக வாழ்ந்து வந்தனரானாலும், அதுபற்றிச் செருக்கென்பதையே கொள்ளாமல், ஒரேமாதிரியான பணிவும், பிரியமும் காட்டித் தங்களது குலத்தொழிலிற்கு எவ்விதப் பங்கமும் நேராமல் ஒழுவிவந்தனர். அந்த ஊரிலிருந்த கூத்தாடிச்சிகள் யாவரிலும் ஒரு வீட்டுக்காரி செல்வாக்கு, அழகு, நாடகம் ஆடும் திறமை, சங்கீதத் தேர்ச்சி, குணத்தழகு, நடத்தையழகு முதலிய சிறப்புகளால் மிகவும் கீர்த்திவாய்ந்து அந்தப் பெண் மலையாளத்திற்கே ஒரு சக்கரவர்த்தினிபோல இருந்து வந்தாள். அவளது மாளிகை ஒர் அரண்மனைபோல அதியுன்னதமாகக் கட்டப்பட்டிருந்த தன்றி, அவளுக்கு