பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 பூர்ணசந்திரோதயம்-1 புறப்பட்டு அம்மன்பேட்டை அன்னத்தின் வீட்டிற்குப்போய், மேன்மாடத்தில் உல்லாலமாக இனிது வீற்றிருந்து அவளது பாட்டுக்கச்சேரியைக்கேட்டு, அவளது நடனத்தைக் கண்டு ஆனந்தபரவசமடைந்திருந்து அவளுக்குஆயிரம் இரண்டாயிரம் கொடுத்துவிட்டு விடியற்காலையில் அரண்மனைக்குத் திரும்பி வந்துவிடுவார். அந்த அன்னத்திற்கு ஐந்துபெண்கள் பிறந்திருந்தார்களானாலும், அவள் தனது உடம்பின் கட்டுத் தளராமலும், மேனி குலையாமலும் அதிக ஜாக்கிரதையாகத் தனது உடம்பைக் காப்பாற்றி வந்தாளாதலால், அவள் குழந்தைகளையே பெறாத இருபத்தைந்து வயது யெளவன ஸ்திரீ போலவே காணப்பட்டாள். அவளது புதல்விகளில் மூத்தவளுக்கு வயது இருபது நடந்தது. மற்றவர்கள் முறையே இரண்டிரண்டு வயது குறைந்தவர்கள். ஆகவே, ஐந்தாவது பெண்ணின் வயது பன்னிரெண்டென்பது சொல்லாமலே விளங்கும். அந்த ஐந்து மடந்தையரும் தாயைப் போல ஒரே அச்சில் கடைந்தெடுக்கப்பட்ட சித்திரப்பாவைகள் போலவும், ஒரே கொத்தில் காய்த்துக் கனிந்த பழங்கள்போலவும், ஒரே கொடியில் மலர்ந்த ரோஜா மலர்கள் போலவும் மகா அற்புதமான அழகோடு காணப்பட்டு மன்மதனது பஞ்ச பாணங்களோ, அல்லது மனிதரது பஞ்சேந்திரியங்களைப் பரவசப்படுத்த சிருஷ்டிக்கப்பட்டுள்ள ஐந்து புதிய இன்பக் களஞ்சியமோ என ஐயுறும் வண்ணம் மிகவும் நேர்த்தியாக இருந்தனர். அவர்களுக்கு முறையே அம்மாளு, தனம் , சிவபாக்கியம், அபிராமி, செல்லம் என்று பெயர் வைக்கப் பட்டிருந்தது. அவர்கள் சாதாரணக் கல்வி கற்பிக்கப்பட்டிருந்த தன்றி, வீணை, பரத நாட்டியம், நாடகம் முதலியவற்றிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தனர். அவர்கள் எவ்விதக் கவலையும் கொள்ளாதபடி மிகவும் செல்வமாக வளர்க்கப்பட்டிருந்தமை யால், அவர்கள் ஐவரும் எப்போதும் குதுகலமாகவே இருந்து வேடிக்கையாகப் பேசிச் சிரித்து எல்லோரிடத்திலும் அன்பாகவும் பிரியமாகவும் ஒழுகிவந்தனராதலால்,