பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 84 துப்பு விசாரிக்க விட்டாலும் விடுவான். அதுக்காகத்தான் யோசித்தேன். கந்தன் :- அப்படி ஒன்றும் நடக்காதண்ணே ராஜாவும் இதிலே சம்பந்தப்படுகிறார். அவர் தன்னுடைய பெயர் வெளியில் வரக்கூடாதென்று கவலைப்பட்டு இந்த விஷயத்தை அடக்கிவிடுவாரே யன்றி வெளிப்படுத்த விடமாட்டார். ஆகையால், அதைப்பற்றி உனக்குக் கவலையே வேண்டாம். இந்தக் கிழவன் மகா டம்பாச்சாரி. இன்னமும் இவனுக்குக் கூத்தியார் பைத்தியம் அடங்காமலே இருக்கிறது. இவன் நகை நட்டுகள் பணங்கள் எல்லாம் நிரம்பக்கொண்டு வந்திருப்பான். ஆகையால், இவனும் வந்து சேர்ந்ததில் நம்முடைய வருமானம் அதிகரிக்கிறதே யொழிய நஷ்டம் ஒன்றுமில்லை. கட்டாரி:- அப்படியானால் நல்லது; இவனையும் சரிப்படுத்தி விடுவோம். அதிருக்கட்டும்; இவர்கள் ஒரு சுமார் எத்தனை நாழிகைக்கு இங்கே இருந்து புறப்படுவார்கள்? கந்தன்:- சுமார்2-மணி3-மணிக்குப்புறப்படலாம்; எனக்கு நேரமாகிறது; எஜமானியம்மாள் என்னைக் கூப்பிட்டாலும் கூப்பிடுவாள். நான் இங்கே நிற்க நேரமில்லை. நீ போய்க் காரியத்தை நடத்து. செளகரியப்பட்டால் நானும் வந்து சேருகிறேன். என்றான். உடனே கட்டாரித்தேவன்கந்தனுக்கு விடை கொடுத்தனுப்ப அவன் வந்ததுபோலவே திரும்பவும் எச்சரிப்பாக நடந்து அந்த மாளிகையின் முன்புறமாகப் போய் அதற்குள் நுழைந்து விட்டான். கட்டாரித்தேவனும் இருளில் மாயமாக மறைந்து போய்விட்டான். அந்த விஷயம் அங்ங்ணமிருக்க, இளவரசரும், மருங்காபுரி ஜெமீந்தாரும் மேன்மாடத்தை அடைய படிக்கட்டின்மீது ஆயத்தமாக நின்றுகொண்டிருந்த கூத்தாடி அன்னமும், அவளது புதல்வியரான ஐந்து மடவன்னங்களும் வெகு சொகுலான அலங்காரங்களோடு ஜெகஜ் ஜோதியாக பூ.ச.1-7