பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 111 களையும் வேலைக்காரிகளையும் ரஸ்தாவில் போகும் ஜனங்களையும் அழைத்து உன்னுடைய கோலத்தைப் பார்த்து சந்தோஷப்படும்படி செய்தாலும் செய்து விடுவேன். ஆனால், அப்படிப்பட்ட இழிவுக்கும் அவமானத்துக்கும் உன்னை ஆளாக்க என் மனம் இணங்கவில்லை. ஆகையால், உன்னை நான் இந்த நிலைமையிலேயே விட்டுப் போகிறேன். உன்னுடைய சாமர்த்தியத்தை உபயோகப்படுத்தி நீயே உன்னை விடுவித்துக்கொள். இன்னம் ஒரு விஷயம் சொல்லிவிட்டு நான் புறப்பட்டுப் போகிறேன். இந்த மாளிகைக்கு வந்த போது நான் என்னுடைய சம்மதியின் மேலேயே வந்தேன். ஆனாலும், உன்னுடைய பைத்தியக்கார எண்ணத்துக்கு உடன்பட வேண்டும் என்றாவது, உன்னுடைய அருவருக்கத்தக்க சொற்களைக் கேட்க வேண்டும் என்றாவது நான் இங்கே வரவில்லை. உன்னுடைய புத்திசாலித்தனத்தை நீ எப்படி உபயோகிக்கிறாய் என்பதையும் நீ எவ்வளவு இழிவாக நடந்து கொள்ளுகிறாய். என்பதையும் பார்த்துக் கை கொட்டிச் சிரித்துவிட்டுப் போக வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் நான் இங்கே வந்தது. நான் வந்த காரியம் பூர்த்தியாக நிறைவேறிவிட்டது. நீயும் தக்கபடி சிகூவிக்கப்பட்டுப் போனாய். இவ்வளவோடு இந்தப் பைத்தியத்தை விட்டுவிடு; பூர்ணசந்திரோதயத்தைப் பற்றி நீ இனி துன்மார்க்கமான எண்ணம் கொண்டு ஏதாவது அயோக்கியத்தனமான முயற்சி செய்தால், இதைவிடப் பதின்மடங்கு அதிகக் கேவலமான இழிவும் மானக் கேடும் வந்து சம்பவிக்கும் என்பது உன்னுடைய மனசில் உறுதியாக இருக்கட்டும். இவ்வளவுதான் நான் சொல்ல வேண்டியது. உத்தரவு வாங்கிக்கொள்ளுகிறேன்; மகாப் பிரபுவே! என்று மிகவும் அருவருப்பாகவும் அலட்சியமாகவும் கூறினாள். அவளது வார்த்தைகளெல்லாம் மகாகூர்மையான் அத்தனை ஈட்டிகள் சொருகப்படுவதுபோல மருங்காபுரி ஜெமீந்தாரினது செவிகளைத் துளைத்து ஊடுருவிச் சென்றன. அவள் அவரை பூ.ச.1-8) -