பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 133 தலையும், கைகளும், கால்களும் இற்று அண்டாவிற்குள் விழுந்துவிட்டதால் முண்டம் மாத்திரம் மேலே வந்தது; அதற்குள் பக்கத்தில் இருந்த சயன அறைக்கு ஒடி படுக்கை மீதிருந்ததுப்பட்டிகளில் இரண்டை எடுத்துக்கொண்டு ஓடிவந்த அந்தப் புருஷர், அவைகளை விரித்துத் தரையில் போட்டு அவளால் கொடுக்கப்பட்ட முண்டத்தை வாங்கி துப்பட்டியில் வைத்து, மற்ற பாகங்களையும் எடுக்கும்படி துரிதப்படுத்த, அவள், தலை, கைகள், கால்கள் முதலியவற்றையும் உடனே ா எடுத்து அவரிடம் கொடுத்துவிட்டு அண்டாவைவிட்டு விரைவாகக் கீழே குதித்து பக்கத்தில் இருந்த படுக்கையறைக்கு ஒடி அதன் பிறகே மூச்சுவிட்டு சுவாசம் வாங்க ஆரம்பித்தாள். அந்த ஐந்து நிமிஷ நேரத்திற்குள் அவள் அனுபவித்த சங்கடமும், கஷ்டமும் நரக வேதனைகளுக்கே ஒப்பிடத் தக்கவையாக இருந்தன. அவளது பிராணன் அநேகமாய் எமனுலகை எட்டிப் பார்த்துவிட்டு வந்ததாகவே சொல்ல வேண்டும். அவ்வாறு படுக்கையறையில் வந்து நின்ற தமது மனைவியை அவர் அதட்டி உள்ளே வரும்படி கூப்பிட, அவள் அஞ்சி நடுங்கி மறுபடியும் ஸ்நான அறைக்கு ஓடிவந்து சேர்ந்தாள். உடனே அந்தப்புருஷர், பிணத்தின் வலது கையில் இருந்த முத்திரை மோதிரத்தை அவளுக்கு முன்பாகக் கழற்றி மறைவான ஒரிடத்தில் வைத்துவிட்டு, பிணத் துண்டங் களையும், நூலேணியையும் துப்பட்டிகளில் வைத்து ஒன்றாகச் சேர்த்து மூட்டைகட்டி வைக்க, அடுத்த நிமிஷத்தில் கட்டாரித்தேவன் அங்கே வந்து சேர்ந்தான். உடனே அந்தப் புருஷர் அவனை நோக்கி, "என்ன கட்டா? வேலை முடிந்து போய்விட்டதா? இதோ மூட்டை தயாராக இருக்கிறது. இதை எடுத்துக் கொண்டு போகலாமா? நாம் இரண்டு பேரும் சேர்ந்து தூக்கினால் அது போதுமா? மூன்றுபேரும் தூக்கவேண்டுமா?' என்றார்.