பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 137 அளித்திருந்தாள். ஆனாலும், அதை நிறைவேற்ற அவளுக்கு மனமில்லை. தான் கோவிந்தசாமியிடம் மேலே போகும்படி சொன்னால், அவன் ஒருவேளை சந்தேகம் கொள்வான் என்று நினைத்தாள். எப்படி என்றால், பெரிய மனிதர்கள் எல்லாம் தங்களது வேலைக்காரர்களை அழைப்பது என்றால், அப்படி மனிதர் மூலமாகச் செய்தி சொல்லி அனுப்பாமல், தங்களது ஆசனத்திற்குப் பக்கத்திலுள்ள விசையை அழுத்தி வேலைக்காரர் இருக்கும் இடத்திலுள்ள மணியை அடித்து, தங்களது கருத்தைத் தந்திபோல ஒரே நொடியில் அவர்களுக்குத் தெரிவித்து அவர்களை அழைப்பது வழக்கம் என்பதைப் பூர்ணசந்திரோதயம் அறிவாள். ஆகையால், அந்த ஏற்பாட்டிற்கு மாறாக தான் அன்றைய தினம் நேரில் போய் வேலைக்காரனை வரச் சொன்னால், அது ஒருவேளைசந்தேகத்தை உண்டாக்கலாம் என்று நினைத்தாள். எவருக்கும் எளிதில் கிடைக்கத் தகாதவளான தன்னை அரும்பாடுபட்டு ஜெமீந்தார் கொண்டு வந்திருக்கையில், அவரே வேலைக்காரர்களை அழைத்துத் தன்னை மரியாதையாக வெளியில் அழைத்துக் கொண்டு போய் வண்டியில் ஏற்றி அனுப்ப வேண்டியது ஒழுங்காக இருக்க, அதைவிட்டு தன்னையே வெளியில் அனுப்பி வேலைக்காரரை மேலே வரச் செய்வது என்றால், அது வேலைக்காரரது மனதில் உடனே சந்தேகத்தை உண்டாக்கும் என்ற எண்ணம் பூர்ணசந்திரோதயத்தின் மனதில் உண்டாயிற்று. தான் கிழவரை ஏமாற்றிவிட்டு வருவதாக வேலைக்காரர்கள் உடனே நினைத்துத் தன்னை வெளியில் விடாமல் வழி மறித்து மறுபடியும் தன்னைப் பலவந்தமாக அழைத்துக்கொண்டு வந்து மேன்மாடத்தில் விட்டு, கிழவரையும் நாற்காலியிலிருந்து விடுவித்தால், அவர் தமது ஆத்திரத்தில் தன்னை வெளியில் விடாமல் எப்படியும் தனது கற்பை அழித்தே அனுப்புவார் என்ற அச்சம் தோன்றியது. ஆகையால், அவள் அவரது விருப்பத்தின்படி கோவிந்தசாமியை மேலே அனுப்ப எண்ண வில்லை. அதோடு, அந்தக் கிழவரின் துடுக்கிற்காகவும்