பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 பூர்ணசந்திரோதயம்-2 சிறைப் படுத்துகையில் அவர் கூச்சலிடுவது வெளியில் கேட்காமல் இருக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு அவர் மிகவும் தந்திரமாக அந்த அறையை அமைத்திருந்தார். ஆதலால், அது இப்போது அவருக்கே துன்பமாக முடிந்தது. அவரது கூக்குரல் வெளியில் கேட்காமல் போய்விட்டது. அவர் நாற்காலியில் கட்டுண்டிருந்து வேதனைப் படப்பட அதற்குமுன் தாம் பல தடவைகளில் மனிதரைக் கொணர்ந்து அந்த நாற்காலிகளில் சிறை வைத்துப் பொழுது விடியும் மட்டும் கவனியாமல் விட்டிருந்த காலத்தில், அவர்களது மனதும் உடம்பும் அப்படித்தானே தவித்து நரக வேதனையுற்று இருக்குமென்ற எண்ணமும் கழிவிரக்கமும் தோன்றி அவரது மனதைத் தண்டித்தன. அப்படிப்பட்ட மகா கேவலமான நிலைமையிலிருந்து வேதனைக்கடலில் ஆழ்ந்து அந்தக் கிழவர் நெடு நேரம் வரையில் தத்தளிக்க, அதற்குமேல் அவரது அங்கங்கள் முற்றிலும் தளர்ந்து உணர்வும் அசைவற்றுப் போனமையால், அவரது மனம் இருளடைந்து போய்விட்டது. அதன்பிறகு என்ன நடந்தது என்பதே அவருக்குத் தெரியாமல் போய்விட்டது. மறுநாளைய பகல் ஒன்பது மணி வரையில் பொறுத்துப் பார்த்த கோவிந்தசாமி ஒருவாறு சந்தேகம் கொண்டு தமது எஜமானர், என்ன நிலைமையில் இருக்கிறார் என்பதை அறியும் பொருட்டு மேன்மாடத்திற்குப் போய் ரதிகேளி விலாசத்திற்குள் சந்தடி செய்யாமல் நுழைந்து பார்க்க, அவனது வியப்பும் திகிலும் அளவில் அடங்காதனவாக இருந்தன. தனது எஜமானர் விசை வைத்த நாற்காலி ஒன்றின் மேல் கட்டுண்டு இறந்தவர் போலக் கிடந்ததைக் கண்டு விரைந்தோடி, விசையை அழுத்தி அவரை விடுவித்து எடுத்து ஒரு கட்டிலின் மீது படுக்க வைத்து விசிறிகொண்டு வீசிப் பலவகையில் அவருக்கு உபசரணைகள் புரிய, அவர் களை தெளிந்தவராய் எழுந்து உட்கார்ந்து கோவிந்தசாமியிடத்தில்