பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/146

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


142 பூர்ணசந்திரோதயம்-2 கொள்ளாமல் நான் இங்கேதான் வருவேனா என்று தற்பெருமையாக மறுமொழி கூறினார். அந்தச் செய்தியைக் கேட்ட ஜெமீந்தார் மிகுந்த மன எழுச்சியும் குதுகலமும் ஆவலும் அடைந்தவராய், 'பலே பேஷ் இப்படிப்பட்ட அபாரமான திறமை உம்மிடம் இருப்பதனாலேதான் எல்லோரும் உம்மைப்பற்றி அவ்வளவு அதிகமாகப் புகழுகிறார்கள்; நானும் மற்றவர்களை விட்டு இந்தக் காரியத்துக்கு உம்மைத் தேர்ந்தெடுத்தேன்' என்று புகழ்ச்சியாகப் பேசினார். உடனே இன்ஸ்பெக்டர் மகிழ்ச்சி அடைந்து, 'தங்களைப் போன்ற பிரபுக்கள் எல்லாம் என்னைப் புகழ் வதைக் கேட்பதாலுண்டாகும் ஆனந்தம் இருக்கிறதே அதைவிட நான் பெறக்கூடிய சன்மானம் வேறே ஒன்றும் இருக்காது என்பது நிச்சயம். ஆனால், இந்த ரகசியத்தைக் கண்டுபிடிப்பதற்கு நான் பட்டபாடு இவ்வளவு அவ்வளவல்ல. நான் உயிர் தப் பிப் பிழைத்து வந்ததை மறு ஜென்மம் என்றே சொல்லவேண்டும்; இருந்தாலும் நான் அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவில்லை. என்னுடைய உத்தியோகமே அப்படிப்பட்டது. நான் இதுவரையில் இதைப் போல எத்தனையோ தடவை அபாயங்களில் அகப்பட்டுத்தப்பி, வந்திருக்கிறேன். ஆனால், இந்தத் தடவை நான் உயிர் தப்பி வந்தது தெய்வச் செயலினால் என்று சொல்ல வேண்டுமே அன்றி என்னுடைய சாமர்த்தியத்தினால் என்று சொல்ல முடியாது' என்று பீடிகை போட்டுப் பேசினார். அதைக் கேட்ட ஜெமீந்தார் விவரங்களை அறிய ஆவல் கொண்டவராய், 'ஒகோ! அப்படியா சங்கதி! போகட்டும்; நல்ல வேளையாக உயிர் தப்பித் திரும்பி வந்திரே! அது ஒன்றே பெரிய சந்தோஷ சங்கதி; அதோடு காரியத்தையும் ஜெயமாக்கிக் கொண்டு வந்திருக்கிறீர். ஆகையால், நாம் இரட்டிப்பு சந்தோஷம் அடைவதோடு உம்மையும் இரட்டிப்பாகப் புகழ வேண்டும்; இருக்கட்டும்.