பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/191

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 179 செய்துவைத்த மரியாதையே அவருக்கு ஏழேழு தலை முறைக்கும் போதும். இளவரசர்:- (மிகுந்த திகைப்பும் ஆவலும் கொண்டு) ஆகா! அப்படியா அவருக்குத் தக்க பிராயச்சித்தம் செய்து வைத்து விட்டாயா? நல்லதாயிற்று. அதை விவரமாகத்தான் சொல்லேன். - பூர்ணசந்திரோதயம்:- அவர் எலிப்பொறியில் அகப்பட்டு விழித்துக்கொண்டு இருக்கிறார். நாளைக் காலை வரையில் யாரும்போய் அவரை விடுவிக்காதபடி தந்திரம் செய்துவிட்டு வந்து விட்டேன். இளவரசர்:- ஸ்பாஷ் பூர்ணசந்திரோதயம் மெச்சினேன்! மெச்சினேன்! அவருடைய ரதிகேளி விலாசத்திலுள்ள இரும்பு நாற்காலியில் அவரை மாட்டிவிட்டு வந்திருக்கிறாய் என்பது நன்றாகத் தெரிகிறது. கிழவருக்கு அவ்வளவும் வேண்டியது தான். எத்தனை பேரை அவர் ஈவிரக்கம் இன்றி இதுவரையில் அதில் மாட்டவைத்தாரோ, அந்தப் பாவம் எல்லாம் ஒன்றுகூடி இன்று அவருக்கு வந்து வாய்த்தது போலிருக்கிறது. உன்னிடத்தில் எவ்வளவுக் கெவ்வளவு நிகரற்ற அழகு பொருந்தி இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு மன உறுதியும் புத்தி சாதுர்யமும் நிறைந்திருக்கின்றன. அதனாலேதான், என் ஆசையை எல்லாம் நான் உன்மேல் வைத்துவிட்டேன். இனி என் ஆயிசுகால பரியந்தம் நான் உன்னுடைய அடிமை என்பது நிச்சயம். போனது போகட்டும். இப்படிப்பட்ட துன்பகரமான விஷயம் நடந்தது என்ற நினைவையே நீ மறந்துவிடு. நாம் இன்றிரவு கொஞ்சமும் துன்பமே இல்லாத நிச்சலமான பேரின்ப சுகம் அனுபவிக்க வேண்டும். நீ களைத்து வந்திருக்கிறாய். இங்கே சகலமான பகrண பலகாரங்களும் கனி வர்க்கங்களும் இளநீர் பால் முதலிய இனிய பானங்களும் இருக்கின்றன. முதலில் நீ