பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


16 பூர்ணசந்திரோதயம்-2 எனக்கும் அவளுக்கும் நடந்த சம்பாஷணையின் வரலாறு களையெல்லாம் அப்படியே உங்களிடம் தெரிவித்துவிட்டேன். அவள் எனக்கு ஆசை நாயகியாய் இருக்க இணங்கிவிட்ட தாகவும், நாளைய தினம் ராத்திரி ஒன்பது மணிக்கு அவளை அழைத்துப்போக ஏற்பாடாகி இருப்பதையும் உள்ளபடி வெளியிட்டு விட்டேன்.ஆனால், நீங்கள் ஆசைப்படுகிறபடி அவளுக்குத் தெரியாமல், அவளை நாம் இங்கே கொண்டு வருவதாக வைத்துக்கொள்வோம். நீங்கள் அவளை இங்கே கொண்டுவந்து தனியாக வைத்துக் கொண்டு அவளுடைய மனசைத் திருப்பவேண்டும். அவள் சாதாரணமான பெண்பிள்ளை அல்ல. நீங்கள் எப்படிப்பட்ட தந்திரம் செய்தாலும், எப்படிப்பட்டநன்னய மொழிகளை உபயோகித்து அவளை நீங்கள் வசப்படுத்த யத்தனித்தாலும் அவள் ஒருநாளும் உங்களுக்கு இணங்கிவர மாட்டாள். அவள் உங்களைவிட ஆயிரம் மடங்கு அதிக கபடமாக நடந்து உங்களை ஏமாற்றி விடுவாள். பலவந்தமாக அவளை நீங்கள் அடக்கி உங்கள் வசப்படுத்துவது என்பது கொஞ்சமும் பலிக்காத விஷயம். அவள் ஒரு ஆட்டுக்குட்டிபோல இருந்து, நீங்கள் ஒரு மதயானையின் பலத்தோடு இருந்தால்கூட, அப்படிப்பட்ட காரியத்தில் நீங்கள் துணிந்து இறங்கமாட்டீர்கள் என்பது நிச்சயம். ஆகையால், உங்களுடைய முயற்சிகள் எல்லாம் வீண் முயற்சிகளாகவே முடியும். கடைசியில் உங்களுடைய மனம் அநாவசியமாகப் புண்பட்டு வருந்த நேரும். அதுதான் மிச்சப்படும். அதை உத்தேசித்து நீங்கள் ஒருவிதமாக நடந்து கொண்டால், அது நல்லதாக முடியும் என்று நினைக்கிறேன்; நான் உங்களுக்கு மகாராஜா வென்ற பட்டம் சம்பாதித்துக் கொடுக்கப் போவதான அந்தப்பெரிய காரியத்துக்கு நீங்கள் எனக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்வதாகச் சொல்லி இருக்கிறீர்கள். அந்த விஷயத்தைக் கருதியும் பூர்ணசந்திரோதயம் உங்களுக்கு இணங்கி வரமாட்டாள் என்பதைக் கருதியும் நீங்கள் நம்முடைய ஒப்பந்தத்தை ரத்து செய்து விடுங்கள்.