பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 17 அதுவே போதுமானது. நீங்கள் எனக்கு அதைத்தவிர வேறே எந்த உதவியும் செய்ய வேண்டாம்” என்றார். அந்த வார்த்தைகளைக்கேட்ட மருங்காபுரி ஜெமீந்தாரது முகம் சடக்கென்று மாறுபட்டது. மிகுந்ததுக்கமும் வெட்கமும் ஏமாற்றமும் அவரது மனதில் குடிகொண்டன. தாம் அவருக்கு என்ன மறுமொழி சொல்வது என்பதை அறியாதவராய்ச் சிறிது நேரம் சிந்தனை செய்தார். அதுவரையில் பூர்ணசந்தி ரோதயத்தின் சுந்தர வடிவத்தைத் தமது இருதய கமலத்தில் வைத்து அவளிடத்தில் தமது மோகவிடாயையும் ஆவலையும் பெருக்கிவந்து கட்டுக்கடங்கா நிலைமையில் இருந்தவர் ஆதலால், மருங்காபுரி ஜெமீந்தார், அப்படிப்பட்ட அரிய மோகனாங்கியை அவ்வளவு எளிதில் தாம் எப்படி விலக்கி விடுவது என்ற தளர்வும் ஏக்கமும் ஏமாற்றமும் ஒரு புறத்தில் வதைக்க, அதனால் மகாராஜா என்ற எவருக்கும் கிடைக்காத பட்டம் போய் விடுமே என்ற அச்சமும், தாம் எப்பாடு பட்டாலும், பூர்ணசந்திரோதயம் தமது வசத்திற்கு வராமல் தம்மிடம் பிடிவாதமாக நடந்து கொள்வாளே என்ற கவலையும் எழுந்து இன்னொரு புறத்தில் வதைத்தன. அதற்குத்தாம் எவ்வித மறுமொழியும் கொடாமல் சும்மா இருப்பது தவறு என்று நினைத்த கிழவர், சரி; அப்படியானால், பார்சீ ஜாதிப் பெண்ணின் விஷயத்தில் தாங்கள் கொண்டிருந்த கருத்தை எல்லாம் இனி விலக்கிவிடப் போகிறீர்களா?' என்றார். அதைக் கேட்ட இளவரசர், நான் இவளொருத்தியோடு நின்று விடுகிறேன். இனி நான் பார்சீஜாதிப் பெண்ணை மனசால் நினைப்பதுகூட இல்லையென்று உங்களுக்கு உறுதி செய்து கொடுக்கிறேன். அவள் யாரென்பதையும் எங்கே இருப்பவள் என்பதையும் நீங்களும் போலீஸ் இன்ஸ்பெக்டரும் சேர்ந்து கண்டுபிடித் திருப் பீர்கள் என்று நம்புகிறேன். அவளை உங்களுடைய பிரியப்படி நடத்திக் கொள்ளுங்கள். அவளும் சாதாரணமான அழகுடையவளல்ல. பூர்ணசந்திரோதயத்தை