பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/202

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


190 பூர்ணசந்திரோதயம்-2 கலியாணம் செய்து கொள்ளத் தோதாக இருக்கும். நீ தார்வார் தேசத்து மகாராஜனுடைய அபிமான புத்திரியென்பது பொப் யென்று நீ ஏற்கெனவே இளவரசரிடம் ஒப்புக் கொண்டிருக்கிறாய். ஆனாலும், நீ இப்போது இளவரசருக்கு எழுதப் போகும் கடிதத்தில், அந்த விஷயத்தை அவருக்கு மறுபடியும் எழுதி, உன்னுடைய கண்ணியத்தைக் கருதி, அந்த வதந்தியை நிஜமான வதந்தியாகச் செய்து விடும்படி கேட்டுக்கொள்ள வேண்டும். நீ அப்படிச் செய்துகொண்டு இளவரசர் உன்மேல் வைத்துள்ள பிரியத்தை முன்னிலும் அதிகமாக விருத்தி செய்துகொண்டு வருவாயானால், நாங்கள் எப்படியாகிலும் பிரயத்தனப்பட்டு இவர் உன்னையே கலியாணம் செய்துகொண்டு பட்டமகிஷியாக்கும்படி செய்து வைக்கிறோம். இது சம்பந்தமாக நாங்கள் செய்துவரும் முயற்சிகளில் நீ கொஞ்சமும் சம்பந்தப்படவும் வேண்டாம்; அதனால், உனக்குக் கொஞ்சமும் பிரயாசையும் உண்டாகாது. தான் சொல்வது தெரிகிறதா?’ என்றான். அவன் சொல்லிவந்த வரலாற்றைக் கேட்ட பூர்ணசந்திரோதயம் மிகுந்த மனவெழுச்சியும் சஞ்சலமும் அடைந்து, 'ஆகா! என் விஷயத்தில் நீங்கள் இருவரும் இதுவரையில் செய்துள்ள உதவிகளை விட இப்போது செய்யப்போவது மகா பிரமாதமானதாக இருக்கிறதே! ஏதோ எனக்கு இளவரசருடைய நட்பு ஏற்படுவது சுலபந்தான். ஆனால், நான் பட்டமகிஷியாவது சாதாரணமான காரியமா? அதுதான் பலிக்குமோ என்பது எனக்குச் சந்தேகமாக இருக்கிறது.' எனறாள. சாமளராவ், 'அந்தக் கவலை உனக்கு எதற்கு? நாங்கள் சொல்வதுபோல, நீ நடந்து கொண்டுவா. மற்ற விஷயங்களை முடித்து வைப்பது எங்களைச் சேர்ந்த பொறுப்பு. அந்த விஷயத்தில் நாங்கள் முயற்சி செய்வதால், உனக்கு எவ்வித நஷ்டமாவது, பிரயாசையாவது, துன்பமாவது உண்டாகப்