பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/203

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் . 191 போகிறதில்லை என்பதை நீ நிச்சயமாக நம்பலாம்: என்றான். பூர்ணசந்திரோதயம் சிறிது யோசனை செய்து,"சரி, உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள். அதிருக்கட்டும்; பூனாவுக்கு அனுப்ப, தாதிகளைத் த்ெரிந்தெடுத்து விட்டீர்களா? அவர்களை நாம் கடைசிவரையில் நம்பலாமா? முடிவுவரையில் உறுதியாக இல்லாமல் அவர்கள் ரகசியத்தை வெளியிட்டு விட்டால், குடிகெட்டுப் போய்விடும். கடைசியில் நாமெல்லோரும் இந்த ஊரைவிட்டே துரத்திவிடப்படுவோம். அப்படிப்பட்ட கெடுதல் உண்டாகாமல், நீங்கள் நிரம்பவும் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும்' என்னாள். சாமளராவ், 'நாங்கள் அப்படிப்பட்ட மனிதர்களைப் பார்த்துப் பிடிப்போமா? முடிவுவரையில் நம்மிடத்தில் உறுதியாக உள்ளவர்களைத்தான் நாங்கள் தேடிப் பிடித்திருக்கிறோம். அவர்கள் ஒருவருக்கொருவர் சம்பந்தம் இல்லாதவர்களாக இருந்தால், நால்வரும் ஒற்றுமையாக வேலை செய்ய மாட்டார்கள் என்ற எண்ணத்தோடு, அவர்கள் நால்வரும், ஒரே வயிற்றில் பிறந்த அக்காள் தங்கைச்சிகளாகப் பார்த்து ஏற்பாடு செய்திருக்கிறோம். இதோ அம்மன்பேட்டை என்ற ஒர் ஊர் இருக்கிறதே. அங்கே அன்னத்தம்மாள் என்று ஒரு கூத்தாடிச்சி இருக்கிறாள். அவளுக்கு நாலு பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் நால்வரையும் அனுப்பும்படிஅன்னத்தம்மாளிடம் ஏற்பாடுசெய்திருக்கிறோம். அவர்களுக்கும் இளவரசருக்கும் அன்னியோன்னியமான சிநேகம் இருக்கிறது. ஆனாலும், அன்னத்தம் மாளுக்கு இளவரசருடைய பட்டமகிஷியிடத்தில் ஒரு காரணமாகப் பகை உண்டு. வருஷா வருஷம் தீபாவளிப் பண்டிகை அன்று எல்லாப் பெண்களும் பட்டமகிஷியிடம் போய்ச் சன்மானம் வாங்குவது உண்டு. போன வருஷம் அன்னத்தம்மாள் பட்டமகிஷியைப் பார்க்கப்போனகாலத்தில் இவள்கித்தாடிச்சி என்பதையும், இவளுடைய பெண்களிடத்தில் இளவரசர் பூ.சி.11-13