பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/204

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


192 - பூர்ணசந்திரோதயம்-2 அன்னியோன்னியமாக இருக்கிறார் என்பதையும் கருதி, பட்டமகிஷி இவளுக்குப் பேட்டி கொடுக்காமல் தூவித்து அனுப்பி விட்டாள். அந்த வருத்தத்தை அன்னத்தம்மாள் இன்னமும் மனசில் வைத்துக் கொண்டி ருக்கிறாள். அது நம்முடைய அம்மாளுக்குத் தெரியும். ஆகையால், அவள் இந்த விஷயத்தில் நம்மிடத்தில் உறுதியாக இருப்பாள் என்றே நாங்கள் நினைக்கிறோம். அது மாத்திரமல்ல. அவளுடைய பெண்கள் பூனாதேசத்துக்குப் போய், நம்முடைய கருத்தை நன்றாக நிறைவேற்றி வைப் பார்களானால், இளவரசருக்கு ஏற்படும் புதிய பட்டமகிஷியின் சிபார்சைக் கொண்டு அன்னத்தம்மாளுக்கு ஒரு பெரிய சன்மானம் செய்வதாக அம்மாள் அவளுக்குச் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறாள். அதாவது, அன்னத்தம்மாள் இருக்கும் கிராமமாகிய அம்மன்பேட்டை என்னும் ஊர் முழுதையும் அவள் பேருக்கு சர்வமானியமாகப் பட்டயத்தின் மூலமாய் இளவரசர் எழுதிக் கொடுத்துவிடும்படி நீ செய்ய வேண்டும். உன்னை இளவரசர் பட்டமகிஷியாக்கிக் கொள்வாரானால், அதன்பிறகு, உனக்கு இது ஒரு பெரிய காரியமல்ல; நீ சொல்லுகிறபடி இளவரசர் நடந்து கொள்வார்' என்றான். பூர்ணசந்திரோதயம், அதெல்லாம் சரிதான். நீங்கள் என்னைத் தான் இளவரசருக்குப் புதிய பட்டமகிஷியாக்கப் போகிறீர்கள் என்பது அன்னத்தம்மாளுக்குத் தெரியுமோ?" என்றாள். சாமளராவ், 'அதை வெளியிடுவோமா? உனக்கும் எங்களுக்கும் உள்ளுக்குள் சம்பந்தம் இருக்கிறது என்பதே இந்த ஊரில் எவருக்குமே தெரியாது. கடைசிவரையில், இந்த ரகசியம் மாத்திரம் வெளிவராதபடி நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்; இந்த விஷயத்தில் நீயும் அதிக ஜாக்கிரதையாகவே நடந்து கொள்ள வேண்டும்'என்றான்.