பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 223 உடையது. ஆகையால், அவர்கள் முன் கட்டைக்கடந்து நடுக்கட்டுக்குள் போய், அவ்விடத்தில் இருந்த ஓர் அறைக்குள் நுழைந்து, பூமியில் மூடப்பட்டிருந்த ஒரு இரும்புக் கதவைத் தரக்க முயன்று கொண்டிருந்த சமயத்தில் முதல் கட்டிலும், மூன்றாவது கட்டிலும் இரண்டு பாகமாகப் பிரிந்து மறைந்து கொண்டிருந்த போலீஸார் குபிரென்று கிளம்பிவந்து திருடர்களைச் சூழ்ந்து கொண்டனர். அறையின் வாசலி லிருந்து கந்தன் திடீரென்று தோன்றிய செந்தலைப் புலிகளைக் கண்டு திடுக்கிட்டுத் திகிலும் குலைநடுக்கமும் அடைந்து பிரமித்து நிற்க, அவ்விடத்தில் வந்த இன்ஸ்பெக்டர் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து கந்தனைப் பிடித்துக் கொண்டார். அப்போது சுரங்கக் கதவைத் தூக்கி நிமிர்த்த எத்தனித்துக் கொண்டிருந்த கட்டாரித் தேவனும் அவனது ஆட்களும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்துப் போலீசார் வந்திருப்பதைக் கண்டுகொண்டனர். உடனே கட்டாரித்தேவன் தனது கையிலிருந்த பளபளப்பான பீச்சாங்கத்தியை ஓங்கிக் கொண்டு குபீரென்று இன்ஸ் பெக்டரை நோக்கிப் பாய்ந்து, அவரது கழுத்தைப் பார்த்து ஒரே வீச்சாக வீச, அதை உணர்ந்த இன்ஸ்பெக்டர் பொறித்தட்டும் நேரத்தில் சடக்கென்று கீழே உட்கார்ந்தபடி பாய்ந்து கட்டாரித்தேவனது இரண்டு கால்களையும் பிடித்து இழுத்துவிட்டார். அதற்குள் கட்டாரித் தேவனால் வீசப்பட்ட கத்தியின் பலமான வீச்சு, இன்ஸ்பெக்டருக்குப் பக்கத்தில் இருந்த கந்தனது கழுத்தில் பட்டு ஊடுருவிப் பாய்ந்து அவனது தலையை வெட்டி வேறாக்கிக் கீழே தள்ளிவிட்டது. அவனது வாயிலிருந்து வீரிட்ட ஒசையொன்று கேட்டது. தடாரென்ற ஓசையுடன் கந்தனது தலயுைம் முண்டமும் கீழே விழுந்தன. இரத்தம் குபீரென்று வெளிப்பட்டு ஆற்று வெள்ளம்போலப் பெருகி அந்த அறை முழுதும் பரவிப்போயிற்று. கந்தனது கழுத்து வெட்டப்பட்ட சமயத்தில் இன்ஸ்பெக்டரால் காலை இழுத்துவிடப்பட்ட கட்டாரித்தேவன் வேரற்ற மரம்போலப் go.o. iR-15