பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 23 அவ்வாறு நவரத்னாலங்கார பூஷிதையாய், அப்போதே - மலர்ந்து நறுமணம் சொரியும் தெய்வலோகத்து மலர்போலவும் தனது பெயருக்குத் தகுந்தபடி பூர்ணசந்திரன் உதயமானது போலவும் புறப்பட்ட அந்தப் பெண்ணரசிகலாபமயில் போன்ற சாயலோடு அன்னமென நடந்து சரியாக ஒன்பதுமணிக்கு வெளிப்பட்டு, ஜெகன்மோகன விலாசத்தின் வாசலிற்கு வர, அவ்விடத்தில் ஓர் அழகான உன்னதப் பெட்டிவண்டி நின்றுகொண்டிருக்க அதன்பக்கத்தில் இரண்டு காசாரிகள் நின்று குனிந்து கும் பிடுபோட்டு அவளை வணங்கி வண்டியின் கதவைத்திறந்துவிட அந்தப் பேடன்னம், மெளனமாக நடந்து போப் வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். உடனே காசாரிகள் வண்டியின் கதவை மூடிவிட்டு வண்டியின் பின்புறத்தில் உட்கார்ந்து கொள்ள சாரதி வண்டியை ஒட்டத் தொடங்கினான். வண்டி விரைவாக ஓடத் தலைப்பட்டது. வண்டிக்குள் உட்கார்ந்திருந்த மின்னற் கொடியான பூர்ணசந்திரோதயத்தின் நிலைமை இன்பமோ துன்பமோ என்று பகுத்தறியக்கூடாத மகா சலனமான நிலைமையாக இருந்தது. அவளது மனம் பொங்கிப் பொங்கி அளவுகடந்து கொந்தளித்துக் கொண்டிருந்தது. அவளது அழகிய மேனி பசத்துப் பூரித்து நடுநடுங்கிக் கட்டிலடங்காமல் தத்தளித்துக் கொண்டிருந்தது. அப்படிப்பட்ட மகா பரிதாபகரமான நிலைமையில் சென்றுகொண்டிருந்த அந்த ரதிதேவி கதவின் இடுக்குகளின் வழியாகத் தனது பார்வையை வெளியில் செலுத்தி, வண்டி எந்த வழியாகப் போகிறது என்பதையும், இரண்டு பக்கங்களில் இருந்த மாடமாளிகை கூட கோபுரங் களையும் வேடிக்கையாகக் கவனித்துக்கொண்டே சென்றாள். அரை நாழிகையில் வண்டி அதன் முடிபு ஸ்தானத்தில் போய் நின்றது. மறுபடியும் காசாரிகள் இறங்கிவந்து, கதவைத் திறந்து விட்டு, இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டதென்று கூறி மரியாதையாக ஒரு பக்கத்தில் விலகி நிற்க, உடனே