பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


24 பூர்ணசந்திரோதயம்-2 பூர்ணசத்திரோதயம் இழே இறங்கினாள். அவ்விடத்தில் ஆயத்தமாக நின்றுகொண்டிருந்த இரண்டு தாதிகள் பூர்ணசந்தி ரோதயத்திற்கு எதிரில் வந்து நிரம் பவும் மரியாதையாக வணங்கி அவளை வரவேற்று, இளவரசர் முதல் உப்பரிகையில் இருப்பதாகவும், அவளை அங்கே அழைத்துக் கொண்டு வரும்படிசொன்னதாகவும் கூறி, அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அது ஒரு விஸ்தாரமான பெருத்த மாளிகையாகக் காணப்பட்டது. அதன்முன் பக்கத்தில் ஒர் அழகிய சிறிய பூஞ்சோலை இருந்தது. அந்தப் பூஞ்சோலையின் இடையில் அற்புதமாக அமைக்கப்பட்டிருந்த புல் நிறைந்த பாதையின் வழியாக அந்தத் தாதிகள் பூர்ணசந்திரோயத்தை நடத்திச்சென்று எதிரில் இருந்த படிக்கட்டுகளின் மேல் அவளை அழைத்துக் கொண்டு முதல் உப்பரிகையை அடைந்தனர். வண்டி வந்துநின்ற ராஜபாட்டையிலும், அந்த மாளிகையின் முன் பக்கத்தில் இருந்த பூஞ்சோலையிலும் விளக்குகள் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தன. ஆதலால், பூர்ணசந்திரோதயம் வண்டியிலி ருந்து கீழே இறங்கி முதல் நாற்புறங்களிலும் திரும்பித் திரும்பிப் பார்த்து அது எந்த இடமென்பதை உற்றுக் கவனித்துக்கொண்டே உள்ளே சென்றாள். அதுபோல அவள் உப்பரிகைப் படிகளின் மேல் ஏறிச்சென்ற காலத்திலும், அடிக்கடி அப்புறம் இப்புறம் திரும்பி ஆராய்ச்சி செய்து கொண்டே நடந்தாள். தாதிகளும் பூர்ணசந்திரோதயமும் படிக்கட்டின் உச்சியை அடைந்து அவ்விடத்திலிருந்த தாழ்வாரத்தை அடைந்தனர். அந்தத் தாழ்வாரம் வலது பக்கத்திலும் இடதுபக்கத்திலும் நெடுந்துரம் சென்றது. அதன் முன்னால் இருந்த கைப்பிடிச் சுவரின் மீது அழகான பூத்தொட்டிகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்ததன்றி, ஆங்காங்கு சம்பங்கி, ஜாதிமல்லிகை, மனோரஞ் சிதம் முதலியவற்றின் கொடிகள் உன்னதமாக ஏற்றிவிடப் பட்டிருந்தன. அந்தத்தாழ்வாரத்தில் ஆங்காங்கு ஜன்னல்களும், வாசற்கதவுகளும் இருந்தது பூர்ணசந்திரோதயத்திற்குத்