பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/332

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


318 பூர்ணசந்திரோதயம்-2 கொண்டு நடுமத்தியில் உட்கார்ந்திருந்தான். ஆனாலும், கொஞ்ச நேரத்தில் அவனுக்கு இருபுறங்களிலிருந்தும் அவனது உடம்பில் தந்திச் செய்திகள் வந்து மோத ஆரம்பித்தன. முழங்காலோடு முழங்கால் வந்து முட்டுவதும், மார்புகள் வந்து புஜங்களின் மேல் உராய்வதும், தலைகள் சோர்ந்து தோள்களின் மேல் உட்காருவதுமான ஊமை ஜாடைகள் தொடக்கமாயின. காமாதுரனாக இருப்பவனுக்கு அந்த நிலைமை சாயுஜ்ய பதவிபோலப் பரம இன்பகரமான நிலைமையாகத் தோன்றும். ஆனாலும், ஏகபத்தினி விரதனான நமது யெளவன வீரனுக்கு அந்த நிலைமை பரம சங்கடமானதாகவும், கேவலம் அசங்கியமானதாகவும். இருந்தது. தான் என்ன செய்வது என்பதே அவனுக்குப் புலப்படாமையால், அவனது மனம் அப்படியே வீழ்ந்துபோய் விட்டது. உடம்பும் தளர்ந்து உட்கார்ந்து போய் விட்டது. கரைகடந்த துக்கம் எழுந்து அவனைக் கப்பிக் கொண்டது. எவராலும் தடுக்கமுடியாத மகா உரமான மோகனாஸ்திரங்கள் அவனைச் சுற்றிலும் வந்து தாக்கின. ஆனாலும், அவன் தனது உறுதியான கொள்கைகளினாலும், வலுவான மனதினாலும் அவற்றை எதிர்த்து நின்று மெளனமாகவே போராடிக் கொண்டிருந்தான். ஏனென்றால் தான் கோரிவந்த காரியம் மகா முக்கியமானது. ஆகையால், அதைக் கருதி தான் அவர்களது மனம் கோணாமல் நடந்து அந்தச் சங்கடங்களை எல்லாம் பொறுத்துக் கொள்வது அத்தியாவசியம் என்று அவன் நினைத்தான். இரண்டு வடிவழகிகளும் இரண்டு பக்கங்களில் இருந்தபடி தந்திரமாகவும், கபடமாகவும் தங்களது கருத்து நன்றாகத் தெரியும்படியாகவும் மோகனாஸ்திரங்கள் தொடுத்து வந்தது எல்லாம், அவர்கள் வேண்டும் என்றே துர் எண்ணத்தோடு செய்யப்படும் காரியம் என்பது அவனுக்கு சந்தேகமற விளங்கிவிட்டது. அதைப்பற்றி அவன் அதற்குமேல் சந்தேகப்பட வேண்டிய அவசியமே இல்லாமலிருந்தது. ஆனால், தான் அத்தகைய கெட்ட நடத்தையுள்ள பெண்களுக்கு