பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 53 கொண்டவராய், 'பெண்ணே உன்னுடைய ஜாகை எங்கே இருக்கிறது? சொன்னால், நான் உடனே உன்னை அங்கே கொண்டுபோய் விடுகிறேன்' என்று மிகவும் அன்பாகவும் மரியாதையாகவும் வினவ, முக்கால் பாகமும் ஸ்மரணைதப்பிக் கிடந்த இளநங்கை, “எங்களுடைய பங்களாதிருவாரூரிலிருந்து நாகைப்பட்டணத்துக்குப் போகும் பாதையின் மேல் சுமார் ஒன்றரை மயில் தூரத்தில் இருக்கிறது' என்றாள். அதற்கு மேல் பேசமாட்டாமல் அவளுக்கு நெஞ்சடைத்துப் போய் விட்டது. அன்று பிற்பகலிலிருந்து நெடுந்துாரம் நடந்து பல வகையில் அல்லல் பட்டு, தனது கற்பையும் உயிரையும் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமே என்ற பெருந் திகிலினால் உலப்பப்பட்டுக் காடுமேடுகளிலும் கல்முள்களிலும் வீழ்ந்து ஒடியும் கடைசியில் தான் அந்த முரடர்களின் வசப்பட்டு முற்றிலும் நம்பிக்கை இழந்து தளர்ந்து சோர்ந்து உயிரழிந்து கிடந்த தருணத்தில் ஈசுவரனே மனித உருவெடுத்துத் தோன்றியதுபோல சரியான சமயத்தில் ஒரே மனிதர் வந்து, அத்தனை முரடர்களையும் வென்று தன்னைக் காப்பாற்றியதைக் காண, அவளது மனம் தாங்க இயலாத அபாரமான மகிழ்ச்சியும் மனவெழுச்சியும் நன்றியறிதலும் கொண்டு ஆனந்தபரவசம் அடைந்தது. பெருத்த அபாயத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்ற பெருந்திகில் உண்டாகி அதுகாறும் அவளது மனதில் அளவிறந்த ஊக்கத்தையும் துணிவையும் பரபரப்பையும் உண்டாக்கிக் கொண்டிருந்தது. ஆனால், நல்ல சமயத்தில் அந்தப் பேருபகாரி தோன்றி தன்னைத் தப் புவித்துக் காப்பாற்றியதைக் காண, அவளது மனதின் பெரும்பிதி குறையவே களைப்பும் சோர்வும் மேலாடின. அவள் மயங்கி உணர்வற்று அப்படியே வீழ்ந்து விட்டாள். தாம் கேட்ட கேள்விக்கு மாத்திரம் மறுமொழி கூறிவிட்டு அவள் மயங்கி வீழ்ந்துவிட்டாள் என்பதைக் கண்டு கொண்ட அந்த மனிதர் அதற்குமேலும் அவ்விடத்திலிருந்து அவளோடு பேசிக் கொண்டிருப்பது உசிதமானது அல்ல என்று நினைத்து வண்டியைத் திருப்பிக் காளைகளை