பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 97 உடனே ஜெமீந்தார், 'சரி சரி; இப்போதுதான் காரணம் சரியாக விளங்குகிறது. போதும்; நீ அதிகமாக விவரித்துச் சொல்ல வேண்டாம். நடந்தது நடந்துவிட்டது. அதைப்பற்றி இனி நீயாவது நானாவது விசனப்பட்டு வருந்துவதனால் எவ்விதமான பயனும் உண்டாகப் போகிறதில்லை. இதுவரையில் அந்த மனிதனால் உனக்கு ஏற்பட்ட இழிவும் அவமானமும் கொடுமைகளும் போதுமானவை. இனி மேலும், நீ அவனிடத்தில் போய் பலவகையில் கஷ்டம் அனுபவிக்க ஆசைப்படமாட்டாய் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். இனிமேல் நீ உன்னுடைய புருஷனிடம் இருக்க வேண்டாம்; இவ்விடத்திலேயே செளக்கியமாக இருந்துவிடு. அவனால் உனக்கு ஏற்படும் சுகமும் போதும்; கஷ்டங்களும் போதுமானவை' என்று முற்றிலும் உருக்கமாகக் கூறினார். லீலாவதி, "நான் இனி உங்களுடைய இஷ்டம்போல நடந்து கொள்ளத் தடையில்லை. ஆனால், அவருடைய சம்மதம் இல்லாமல் நானே திடீரென்று அவரைவிட்டு இங்கேயே இருந்துவிட்டால், அவர் என்னைச் சும்மா விடக் கூடியவரா? அவர் பலவகையில் எனக்கு இடைஞ்சல் செய்து என்னை உபத்திரவித்துக்கொண்டுதான் இருப்பார்' என்றாள். ஜெமீந்தார், 'அவன் உன் ஜோலிக்கே வராமல் இருக்கும்படி செய்ய ஏதாவது வழியுண்டானால் சொல்; அந்தப்படி ஏற்பாடு செய்துவிடுவோம்' என்றார். லீலாவதி, 'அதற்கு வேறே ஒரு வழியும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர் எப்போதும் பணம் பணம் என்று அதே பைத்தியமாக அலைந்து கொண்டிருக்கிறார். பணம் கிடைக்கு மானால், அவர் எந்தக் காரியத்தையும் செய்ய இணங்கி விடுவார். என்னை அவர் இப்போது விடாமல் வைத்துக் கொண்டிருப்பதன் முக்கியக் கருத்து, என் மூலமாகப் பலவகையில் பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணந்தான்' என்றாள்.