பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பூர்ணசந்திரோதயம்-3 ஜெமீந்தார், "அப்படியானால், நான் அவனுக்கு மாசம் ஒன்றுக்கு ரூபாய் ஐந்நூறு விதம் வருஷம் ஒன்றுக்கு ஆறாயிரம் ரூபாய் பணம் கொடுக்கும்படி ஏற்பாடு செய்து விடுகிறேன். அவன் இந்த ஊரைவிட்டு மைசூர் ராஜ்ஜியத்துக்குப் போய்விட வேண்டும். அவ்விடத்தில் மாசாமாசம் அவனுக்கு இந்தத் தொகை கிடைக்கும்படி நான் ஏற்பாடு செய்கிறேன். இந்த நிபந்தனைக்கு அவன் அவசியம் இணங்குவான் என்று நான் நம்புகிறேன். ஆகையால், நீ அவனிடம் போப், எல்லா விஷயங்களையும் எடுத்துச் சொல்லி, நான் சொன்ன நிபந்தனையின்மேல் அவன் மைசூருக்குப் போக ஒப்புக் கொள்ளுகிறானா என்பதை அறிந்து கொண்டு வருகிறாயா?" என்றார். லீலாவதி, "ஓ! அப்படியே செய்கிறேன். இப்போதே நீங்கள் என்னை ஒரு பெட்டி வண்டியில் வைத்து அனுப்பி வைத்தால், நான் போய் விஷயத்தை அவரிடத்தில் பிரஸ்தாபித்து நாளைய தினம் சாயுங்காலம் திரும்பி வந்து முடிவைத் தெரிவிக்கிறேன்'என்றாள். அதை ஒப்புக்கொண்ட மருங்காபுரி ஜெமீந்தார், உடனே தமது காரியதரிசியை வரவழைத்து, வண்டி தயாரிக்கச் செய்து லீலாவதிக்கு அனுமதி கொடுத்து வண்டியில் வைத்து அனுப்பி வைததாா. 27-வது அதிகாரம் அளவுகடந்தால் அமுதமும் விஷம் லீலாவதி இரவு ஒரு மணி சமயத்தில், மாரியம்மன் கோவிலிலுள்ள தங்களது ஜாகையை அடைந்து, வெளிக்கதவைத் தட்டினாள். அவளது புருஷரான மாசிலா மணிப்பிள்ளை அவள் விடியற்காலையிலே தான் வருவாள்