பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 99 என்று நினைத்து நித்திரை செய்துகொண்டிருந்தார் ஆகையால், அந்த அகாலத்தில் அவள் திரும்பி வந்தது சிறிதும் எதிர்பார்க்காததாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. அவரது வேலைக்காரி தூரமான ஒர் அறையில் நித் திரை செய்து கொண்டிருந்தாள் ஆகையால், அவரே நேரில் வந்து வாசற் கதவைத் திறந்துவிட, லீலாவதி தடதடவென்று உள்ளே நுழைந்தாள். அவள் அவரது முகத்தை ஏறெடுத்துப் பார்க்காமலும், அதிக துக்கமும் கோபமும் நிறைந்த முகத்தோற்றத் தோடும் உள்ளே வந்ததைக் கவனித்த மாசிலாமணிப்பிள்ளை திடுக்கிட்டு வியப்படைந்து, ‘என்ன லீலாவதி ஏன் இவ்வளவு சீக்கிரமாகத் திரும்பி வந்து விட்டாய்? போன காரியம் ஜெயந்தானே?' என்றார். அவர் சொன்ன சொற்களைக்கேட்டு நிரம்பவும் அருவருப் படைந்தவள்போலத் தனது முகத்தைச் சுளித்துக்கொண்டு, 'நல்ல ஆண்பிள்ளை நல்ல கேள்வி' என்று வாய்க்குள்ளாகவே முணுமுணுத்துக்கொண்டு அவரது கையில் இருந்த விளக்கை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு உள்ளே போய்ப் பக்கத்தில் இருந்த சமயலறையை அடைந்து அவ்விடத்தில் பானையி லிருந்து ஒரு செம்பு தண்ணீர் எடுத்து நிரம்பவும் ஆவலோடு மடமடவென்று குடித்துவிட்டுத் தனது சயன அறையை நோக்கி நடக்கலானாள். அவளுடன் கூடவே தொடர்ந்து வந்த மாசிலாமணிப் பிள்ளை அவள் முணுமுணுத்துச்சொன்ன மறுமொழியை அரை குறையாகக் கேட்டவர் ஆதலால் அவள் என்ன சொன்னாள் என்பதை அறிய ஆவல் கொண்டு, 'என்ன என்ன என்ன சொன்னாய்? நீ என்னைப்பற்றி ஏதோதுஷணையாகச் சொன்ன மாதிரி இருக்கிறதே. சொன்னதை நன்றாக உரக்கச் சொல்” என்றார். - லீலாவதி, "நான் உங்களைத் துஷிக்க எனக் கென்ன பைத்தியமா? உங்களை ஏன் துரஷிக்கிறது? என்னுடைய தலை