பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

重00 - பூர்ணசந்திரோதயம்-3 விதியையும் மூட புத்தியையும் அல்லவா துஷித்துக் கொள்ள வேண்டும்' என்று அருவருப்போடு மறுமொழி கூறினாள். மாசிலாமணிப் பிள்ளை, "ஏன் ஒரு மாதிரியாகப் பேசுகிறாய்? போன இடத்தில் என்ன நடந்தது என்பதை இப்போதே சொல்லலாமா? அல்லது, காலையில் சொல்லப் போகிறாயா?" என்றார். 'எப்போது சொன்னாலும் ஒன்றுதான். இப்போதுதான் ஆகட்டுமே” என்று எடுப்பாகவும் அலட்சியமாகவும் லீலாவதி மறுமொழி கூறினாள். இயற்கைக்கு விரோதமாகவும், தனது பணிவையும் மரியாதையையும் இழந்தும் அவள் பேசியதைக் கேட்ட புருஷர் நிரம்பவும் ஆத்திரம் அடைந்து அவளோடு சண்டைக்கு ஆயத்தமாய், சரி; நீ பேசும் முறைப்பைப் பார்த்தால், என்னோடு கொஞ்சம் சண்டை போட வேண்டும் என்று உனக்கு ஆசைபோல் இருக்கிறது” என்று அதட்டலாகப் பேசினார். லீலாவதி முன்னிலும் அதிக முறுக்காகப் பேசத்தொடங்கி, 'சாகத் துணிந்தவளுக்குச் சமுத்திரம் முழங்கால் அளவு என்று சொல்லுவார்கள். அதைப்போல, யாருடைய சண்டைக்கும், நான் இனி பயப்படக் கூடியவளல்ல' என்றாள். அவளது வீறாப்பு மொழியைக் கேட்ட மாசிலாமணிப் பிள்ளை ரெளத்திராகாரமான கோபம் கொண்டு, 'ஏது இன்றையதினம் நீ இவ்வளவு தைரியமாகப் பேசஆரம்பித்தது? யாரிடத்தில் பேசுகிறோம் என்பதைச் சுத்தமாக மறந்து பேசுகிறாயே! எனக்காக நிரம் பவும் சிரமப்பட்டுத் தஞ்சாவூருக்குப் போய் அலுத்து வந்திருக்கிறாயே என்ற இரக்கத்தினால் நான் நீ சொல்லும் வார்த்தைகளை இதுவரையில் பொறுத்துக்கொண்டேன். இல்லையானால், இந்நேரம் உன்னுடைய பற்களெல்லாம் காற்றில் பறந்து போயிருக்கும்' என்று மூர்க்கமாகப் பேசிய வண்ணம் தமது விரல்களை மடக்கிக் கொண்டு ஆத்திரத்தோடு அவளை நோக்கிப் பாய்ந்தார். அவள் சடேரென்று ஒரு பக்கமாக ஒதுங்கி நின்று, "ஆகா!