பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 10 Í எவ்வளவு சூரத்தனம்! என்னை அடிப்பதிலும் வைவதிலும் காட்டும் ஆண்மைத்தனம், என்னைத் தஞ்சாவூருக்கு அனுப்பும்போது எங்கே போய்விட்டதோ தெரியவில்லை. இப்போது உங்களுக்கு இருக்கும் ஆத்திரம் எல்லாம், இன்னம் பாதிப்பணமான ஆயிரம் ரூபாயை என்னிடத்திலிருந்து வாங்கிக் கொள்ள வேண்டும் என்னும் ஆத்திரம்தான். அந்த விஷயத்தில் நீங்கள் ஏமாறிப்போகப் போகிறீர்கள். நான் பணம்கொண்டு வரவில்லை' என்று அருவருப்பாகவும் ஆத்திரமாகவும் கூறினாள். அதைக் கேட்ட மாசிலாமணிப் பிள்ளை, தமது பொறுமையை இழந்து முன்னிலும் அதிக ஆத்திரத்தோடு பேசத் தொடங்கி, 'அப்படியானால், நீ அந்தப் பெரிய மனிதரை சந்திக்கவே இல்லையா?" என்றார். லீலாவதி, ‘அவரைச் சந்திக்காமல் என்ன? என்று விரக்தியாக மறுமொழி கூறினாள். மாசிலாமணிப் பிள்ளை, 'அப்படியானால், அவர் உன்னை ஏமாற்றி விட்டாரா? அல்லது நீதான் அங்கே போனவுடன் பதிவிரதைத் தனம் கொண்டாடி அவரிடம் நெருங்காமல் இடக்குப் பண்ணிவிட்டுத் திரும்பி வந்து விட்டாயா? அல்லது, அந்த ஹேமாபாயிதான் பணத்தை அபகரித்துக் கொண்டு உன்னை ஏமாற்றி அனுப்பி விட்டாளா? நிஜத்தைச் சொல்' என்று நிரம்பவும் ஆவலோடு வினவினார். லீலாவதி மனநொந்து பேசத்தொடங்கி, 'அங்கே வந்திருந்தவர் என்னுடைய பெரிய தகப்பனார்?' என்றாள். அதைக் கேட்ட மாசிலாமணிப் பிள்ளை திடுக்கிட்டுத் திகைப் படைந்து, 'என்ன ஆச்சரியம்! உன்னுடைய பெரிய தகப்பனாருக்காகவா ஹேமாபாயி உன்னை அழைத்துக் கொண்டு போனாள்? காரியம் விபரீதமாக இருக்கிறதே! கடைசியில் நீ அவருக்கு என்ன சமாதானம் தான் சொன்னாய்?