பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 103 செய்வோம். நமக்கு வேண்டிய பணத்தொகையை எல்லாம் அவர் கொடுப்பதாக ஒப்புக்கொள்ளும்போது, இனி பணம் சம்பாதிக்கும் துன்பம் எனக்கும் இல்லை உனக்கும் இல்லை. இதைப் பற்றி நீ என்னுடைய சம்மதியைக் கேட்கவும் வேண்டுமா? நீயே சம்மதியென்று சொல்லிவிட்டு வரக் கூடாதா? எப்போது நாம் இவ்விடத்தை விட்டுப் புறப்படு கிறது? இப்போதே புறப்படுவோமா? அல்லது, நாளைக்குக் காலையில் புறப்படலாமா? என்றார். லீலாவதி, நானும் உங்களோடு கூட வர வேண்டுமா? எனக்குப் பதிலாகத்தான் உங்களுக்குப் பணம் வரப் போகிறது. அவர் உங்களோடு என்னையும் அனுப்பி மாதாமாதம் பணமும் ஏன்கொடுப்பார்? அதற்கு அவர் ஒருநாளும் இணங்கமாட்டார்; என்னை எங்களுடைய வீட்டிலேயே வைத்துக் கொள்ளப் போகிறார். ஆகையால், நீங்கள் மாத்திரந்தான் போகவேண்டும். உங்களுக்கு எப்போது செளகரியமோ அப்போது புறப்பட்டுப் போகலாம்” என்று வெறுப்போடு கூறினாள். மாசிலாமணிப்பிள்ளை கோப நகை நகைத்து, 'ஒகோ உன்னை விட்டு நான் மாத்திரம் போவேனென்று நினைத்தாயா! அது ஒரு நாளும் பலியாது கண்ணே உன் பெரியப்பன் கொடுக்கும் ஐந்நூறு ரூபாய் காசுக்காக நான் என்னுடைய பெண்டாட்டியை இழந்துவிடுகிறதா? நன்றாயிருக்கிறதே ஏற்பாடு அவர்தான் சாகப்போகிற கிழவர்; மூளை கெட்டுப் போயிருப்பதால், இப்படிப்பட்ட பிரஸ்தாபம் செய்கிறார். நீயும் அதை ஒப்புக்கொண்டு பேசாமல் எப்படி வந்தாய்? என்னை விட்டுப்பிரிந்திருக்க உனக்குத்தான் எப்படிசகிக்கும்" என்றார். அவரது சொற்களைக் கேட்ட லீலாவதி முன்னிலும் அதிக உறுதியான குரலில் பேசத்தொடங்கி, “நீங்கள் என்ன சொன்னாலும் இனி என்னுடைய தீர்மானம் மாறப்போகிறது இல்லை. நாம் இருவரும் இனி ஒரு நிமிஷ நேரங்கூட ஒத்து வாழ முடியாது. ஆகையால், நான் எங்களுடைய வீட்டிலேயே