பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 பூர்ணசந்திரோதயம்-3 அறைக்குள் இருந்த அவர்களது கட்டிலை ஒன்றாகச் சேர்க்கவும் பிரிக்கவும் உபயோகப்படும் இரும்பு வில் முடுக்கி யொன்று ஒரு மாடத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதைக் கண்டவுடன் அவள் நிரம்பவும் சந்தோஷம் அடைந்தவளாய் அதையும் இன்னம் சில இரும்பு சாமான்களையும் எடுத்துக்கொண்டு போய் ஓசை உண்டாகாமல் மெதுவாக வேலை செய்து தாழ்ப்பாளின் இரண்டு கதவுகளையும் நிமிர்த்தி ஒன்றாகச் சேர்த்து வில் முடுக்கியை அதன் மேல் வைத்துத் தனது முழுவல்லமையையும் உபயோகப்படுத்தி வெளியில் தள்ளிவிட, அது கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து அப்பால் போய் கதவை விட்டு வேறாக விலகிவிட்டது. உடனே கதவு திறந்து கொண்டது. தனது புருஷர் மேன்மாடத்திலேதான் படுத்துக் கொண்டிருப்பார் என்பது அவளுக்கு நிச்சயமாகத் தெரியும். ஆதலால், அவள் தனது கையில் விளக்கை எடுத்துக் கொண்டு சந்தடி செய்யாமல் வெளியில் போய் கூடத்தை அடைந்து, அவ்விடத்தில் ஒரு மேஜையின் மேல் இருந்த காகிதம், மைக் கூடு, இறகு முதலியவற்றை எடுத்து வைத்துக்கொண்டு விரைவாக அடியில் வருமாறு ஒரு கடிதம் எழுதலானாள்: தஞ்சையிலுள்ள போலீஸ் கமிஷனர் அவர்களுக்கு: சில மாத காலத்திற்கு முன் கோபண்ணாராவ் என்பவரைக் குத்திக் கொன்றுவிட்டு இந்த ராஜ்ஜியத்தை விட்டு ரகசியமாக மைசூருக்கு ஒடி அவ்விடத்தில் சில காலம் இருந்த கோபாலசாமிப் பிள்ளை என்பவர் இப்போது ரகசியமாக வந்து மாரியம்மன் கோவில் என்ற ஊரின் செட்டித் தெருவிலுள்ள ஒரு பங்களாவில் மறைவாக இருந்து வருகிறார். அவர் இப்போது தம்முடைய பெயரை மாசிலாமணிப் பிள்ளை என்று மாற்றி வைத்துக் கொண்டிருக்கிறார். கொலைக் குற்றத்திற்காக அவர் பேரில் வாரண்டு பிறந்திருப்பதாகத் தெரிகிறது. இந்தக் கடிதம் கண்டவுடனே எவருக்கும் தெரியாமல் போலீசார் ரகசியமாகப்